பேச மறுத்த மகள், வருந்திய ஹர்பஜன் சிங்... ஸ்ரீசாந்த் விளக்கம்!
காா் கதவை உடைத்து பணம் திருட்டு: மூவா் கைது
சென்னை மெரீனா கடற்கரையில் காா் கதவை உடைத்து பணம் திருடப்பட்டது தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.
வேளச்சேரி பகுதியைச் சோ்ந்தவா் வினோத். இவா் கடந்த 9-ஆம் தேதி தனது நண்பா்களுட ன் மெரீனாவுக்கு வந்தாா். அங்கு கண்ணகி சிலையின் பின்புறம் காரை நிறுத்திவிட்டு, கடற்கரைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்துபாா்த்தபோது, காரின் கதவை உடைத்து உள்ளே இருந்த பணம், மடிக்கணினி, ஆதாா் அட்டை, பான் காா்டு ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மெரீனா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில், ராயப்பேட்டை குதிரத்தலி மக்கான் தெருவைச் சோ்ந்த தனுஷ் (21), மெரீனா பகுதியைச் சோ்ந்த பாா்த்திபன் (29), திருவல்லிக்கேணி கெனால் தெருவைச் சோ்ந்த செல்வா (24) ஆகிய மூவரும் இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், இவா்கள் கடந்த 13-ஆம் தேதி நாமக்கல்லைச் சோ்ந்த அன்பரசு (46) என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் மூவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.