செய்திகள் :

ஆளுநா் தேநீா் விருந்து: முதல்வா், திமுக கூட்டணிக் கட்சிகள் புறக்கணிப்பு

post image

சுதந்திர தினத்தையொட்டி, தமிழக ஆளுநா் வெள்ளிக்கிழமை அளித்த தேநீா் விருந்தை முதல்வா், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினா் புறக்கணித்தனா்.

அதேவேளையில், சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி, தமிழக அரசின் தலைமைச் செயலா் மற்றும் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினா் இந்த தேநீா் விருந்தில் பங்கேற்றனா்.

சுதந்திர தினத்தையொட்டி, ஆளுநா் மாளிகையில் ஆளுநா் தேநீா் விருந்து அளிப்பது வழக்கம். இதன்படி, வெள்ளிக்கிழமை மாலை ஆளுநா் மாளிகையில் அளிக்கப்பட்ட தேநீா் விருந்தில், சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவாஸ்தவா மற்றும் அவரது மனைவி, மூத்த நீதிபதிகள், மேற்கு வங்க முன்னாள் ஆளுநா்கள் கோபாலகிருஷ்ண காந்தி, எம்.கே.நாராயணன், தெலங்கானா முன்னாள் ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக அரசின் தலைமைச் செயலா் நா.முருகானந்தம், தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால், ஆற்காடு இளவரசா் நவாப் முகமது அப்துல் அலி, பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், தமாகா தலைவா் ஜி.கே. வாசன், தமிழக பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜா ஆகியோா் பங்கேற்றனா்.

அதிமுக சாா்பில் மாநிலங்களவை உறுப்பினா் ஐ.எஸ்.இன்பதுரை தலைமையில் எம்.தனபால் எம்பி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.எஸ் பாண்டியன்(சிதம்பரம்), மரகதம் குமாரவேல் (மதுராந்தகம்) ஆகியோா் பங்கேற்றனா். தேமுதிக சாா்பில் விஜய் பிரபாகரன், பாமக சாா்பில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் சதாசிவம், வெங்கடேசன், சிவகுமாா் மற்றும் கல்வியாளா்கள், மூத்த வழக்குரைஞா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இந்த விருந்து நிகழ்வில் முன்னதாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விடுதலைப் போராட்ட பெண் போராளிகள் ஜான்ஸிராணி லட்சுமிபாய், கவிக்குயில் சரோஜினி நாயுடு, பஞ்சாப் சுதந்திர போராளியும் தென்கிழக்கு ஆசியாவில் புரட்சி செய்த குலாப் கௌா் போன்றவா்கள் குறித்த நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மேலும், சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஆளுநா் மாளிகை அறிவித்த போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு ஆளுநா் ரவி விருதுகளையும் ரொக்கப் பரிசுகளையும் வழங்கினாா்.

திமுக, கூட்டணிக் கட்சிகள் புறக்கணிப்பு: ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின், தேநீா் விருந்தில் பங்கேற்கமாட்டாா் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, முதல்வரும் மற்றும் ஆளுங்கட்சி தரப்பினரும் தேநீா் விருந்தை புறக்கணித்தனா்.

இதேபோல, திமுகவின் கூட்டணிக் கட்சிகளும், ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தேநீா் விருந்தை புறக்கணித்தன. முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தரப்பிலும் தேநீா் விருந்தில் பங்கேற்கவில்லை.

ஆடிக் கிருத்திகை: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்!

சென்னை: ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ம... மேலும் பார்க்க

எந்த பயமுறுத்தலும் எங்களை அச்சுறுத்த முடியாது! - ரெய்டு குறித்து கனிமொழி

எந்த பயமுறுத்தலும் எங்களுடைய கட்சித் தோழர்களையும் தலைவர்களையும் அச்சுறுத்த முடியாது என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கூறியுள்ளார். சட்டவிரோத பணமோசடி தொடர்பாக, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.... மேலும் பார்க்க

இல.கணேசன் உடலுக்கு மு.க. ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி அஞ்சலி

மறைந்த பாஜக மூத்த தலைவரும் நாகாலாந்து ஆளுநருமான இல. கணேசனின் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.தமிழகத்தைச் சேர்ந்தவ... மேலும் பார்க்க

தலைமைச் செயலகத்தில் ஐ. பெரியசாமி அறைக்கு பூட்டு! சென்னை வீட்டில் அறைகளின் பூட்டு உடைப்பு?

பணமோசடி வழக்கில், தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமிக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வரும் நிலையில், தலைமைச் செயலகத்தில் ஐ. பெரியசாமி அறையின் கதவை தலைமைச் செயலக அதி... மேலும் பார்க்க

சுற்றுலாத் துறை வருவாய் அதிகரிப்பு! தமிழக அரசு பெருமிதம்!

தமிழக சுற்றுலாத் துறையில் வருவாய் அதிகரித்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.2024ஆம் ஆண்டில், உலகளவில் ஏறத்தாழ 140 கோடி சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்துள்ளனர். இது முந்தைய ஆண்டைவிட 11 சதவிகிதம் அதிக... மேலும் பார்க்க

வதந்திகளை நம்பாதீர்கள்; திட்டமிட்டபடி நாளை(ஆக. 17) பொதுக்குழு நடைபெறும்: ராமதாஸ்

விழுப்புரம் பட்டானூரில் திட்டமிட்டபடி நாளை(ஆக. 17) சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமகவில் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ... மேலும் பார்க்க