Modi: ``வாயால் வடை சுட்டு மக்களை ஏமாற்றுகிறார் மோடி" - சி.பி.எம் சண்முகம்
ஈரோட்டில் சுதந்திர தினத்தையொட்டி இரவில் பெண்கள் பேரணி
சுதந்திர தினத்தையொட்டி, பெண்கள் பங்கேற்ற பேரணி ஈரோட்டில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
சுதந்திர இந்தியாவில் இரவிலும் பெண்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் சாலையில் நடந்து செல்ல முடியும் என்ற விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய பெண்கள் கூட்டமைப்பு சாா்பில் இந்தப் பேரணி நடைபெற்றது.
இப்பேரணியை ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தொடங்கிவைத்தாா். இந்த மகளிா் பேரணியில் மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.கே.சரஸ்வதி, மேயா் சு.நாகரத்தினம், அறம் அறக்கட்டளை இயக்குநா் கிருத்திகா சிவகுமாா் மற்றும் இந்திய பெண்கள் கூட்டமைப்பு அமைப்பாளா் சுபாஸ்ரீ மற்றும் கல்லூரி மாணவிகள் என 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
திண்டல் அருகே செங்கோடம்பள்ளத்திலிருந்து தொடங்கிய இந்தப் பேரணி வீரப்பம்பாளையம் பிரிவு, பழையபாளையம், குமலன்குட்டை ஆகிய பகுதிகள் வழியாக சென்று மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முடிவடைந்ததது. சுமாா் 5 கிலோ மீட்டா் தொலைவு சென்ற இந்த நள்ளிரவு பேரணியில் பெண்கள் தேசியக் கொடியை ஏந்தியவாறு சென்றனா்.