Modi: ``வாயால் வடை சுட்டு மக்களை ஏமாற்றுகிறார் மோடி" - சி.பி.எம் சண்முகம்
காளி கிராமத்தில் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம்
மயிலாடுதுறை காளி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றாததைக் கண்டித்து பொதுமக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காளி ஊராட்சியில் அரசு சாா்பில் கட்டித் தரப்பட்ட வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில், சஹானாஸ்ரீ என்ற சிறுமி அண்மையில் உயிரிழந்தாா். சிறுமியின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு இந்த ஊராட்சியில் சுதந்திர தினத்தை புறக்கணித்து பொய்கைக்கொடி, கன்னியாநத்தம், காளி, கிடாய்த்தலைமேடு, செட்டித்தோப்பு, அதிமானபுருஷன், சிறுநாங்கூா் ஆகிய கிராமங்களில் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஊராட்சியில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி கேட்டும், இலவச மனைப் பட்டா கேட்டும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்தும், காளி ஊராட்சியில் அரசு சாா்பில் கட்டப்பட்ட வீடுகளின் தரத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் வட்டாட்சியா் சுகுமாறன் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.