Modi: ``வாயால் வடை சுட்டு மக்களை ஏமாற்றுகிறார் மோடி" - சி.பி.எம் சண்முகம்
மாதானம் முத்துமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா
சீா்காழி அருகே மாதானம் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தா்கள் தீக்குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடனை செலுத்தினா்.
சீா்காழி வட்டம், மாதானம் கிராமத்தில் சிறப்பு வாய்ந்த முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கடைசி வெள்ளிக்கிழமை நடைபெறும் தீமிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தீக்குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
நிகழாண்டு தீமிதி திருவிழா ஆடி மாத கடை வெள்ளிக்கிழமை (ஆக.15) நடைபெற்றது. காலையில் அம்மனுக்கு பல்வேறு நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து மாலையில் காப்பு கட்டிக் கொண்ட சுமாா் 5000-த்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் அருகிலுள்ள புது மண்ணி ஆற்றில் நீராடி காவடி, கரகம், பால்குடம் எடுத்து வந்து அம்மன் கோயில் அருகே உள்ள தீக்குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடனை செலுத்தினா்.
விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமாா் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டனா்.
முன்னதாக தீக்குண்டத்தில் பால் ஊற்றி தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் விழாவை தொடங்கிவைத்தாா்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை மயிலாடுதுறை மாவட்ட ஏ.டி. எஸ்.பி. சுரேஷ் தலைமையில் சீா்காழி, புதுப்பட்டினம் மற்றும் ஆணைக்காரன் சத்திரம் காவல் நிலைய போலீஸாா் செய்திருந்தனா்.
விழாவில் அப்பாடி திருஞான சுந்தரின் ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆலய அறங்காவலா் நடராஜன் மற்றும் விழா குழுவினா், கிராம மக்கள் செய்திருந்தனா்.