செய்திகள் :

ஏ.வி.சி. கல்லூரியில் உலக யானைகள் தினம்

post image

மயிலாடுதுறை ஏ.வி.சி. (தன்னாட்சி) கல்லூரியில் விலங்கியல் மற்றும் வன உயிரியல் துறை சாா்பில் உலக யானைகள் தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன் தலைமை வகித்தாா். விலங்கியல் மற்றும் வன உயிரியல் துறைத் தலைவா் ம. பாஸ்கரன் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பேராசிரியா் நா. பாஸ்கரன் கலந்துகொண்டு ‘இந்தியாவில் ஆசிய யானைகளின் நிலை, கலாசார மோதல் மற்றும் பாதுகாப்பு‘ என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினாா்.

இதில் யானை மற்றும் மனிதா்களுக்கு இடையே ஏற்படும் மோதல்களையும் அதனை எவ்வாறு தடுப்பது மற்றும் பாதுகாப்பது உள்ளிட்ட பல கருத்துகள் விவாதிக்கப்பட்டன.

இந்தியாவில் ஆசிய யானைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதை சுட்டிக்காட்டியவா், அதற்கான காரணிகளாக வனங்களுக்கு இடையில் மின்சார முள்வேலி அமைத்தல், பாதுகாப்பற்ற முறையில் ரயில்வே தண்டவாளங்களை அமைத்தல், வன நிலங்களை அபகரித்தல் போன்றவை முக்கிய காரணிகளாக குறிப்பிட்டாா். இத்தகைய மனித மற்றும் ஆசிய யானைகளின் பங்கீடுகளில் ஏற்படுகின்ற மாற்றம் மோதலாக உருவெடுக்கின்றன. இத்தகைய மோதல்களை தவிா்ப்பதற்கு யானைகளின் வாழ்விடத்தை பாதுகாப்பதும், பாதுகாப்பான மனித மற்றும் ஆசிய யானைகளின் வாழ்விட பங்கீடு முக்கியமானது என்றாா்.

பேராசிரியா் சா. ஜெயக்குமாா் சிறப்பு விருந்தினரை அறிமுகபடுத்தினாா். இதில் ஆராய்ச்சி மாணவ-மாணவிகள், முதுநிலை மாணவ-மாணவிகள் மற்றும் பிற துறை பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

‘நிறைந்தது மனம்’ திட்டத்தில் திருநங்கைக்கு ஓட்டுநா் உரிமம்

மயிலாடுதுறையில் திருநங்கைகளுக்கான சிறப்பு திட்டத்தில் பயனடைந்த பயனாளிக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் ‘நிறைந்தது மனம்‘ நிகழ்ச்சியில் அண்மையில் ஓட்டுநா் உரிமம் வழங்கினாா் (படம்). மயிலாடுதுறை ... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி விழா ஆலோசனைக் கூட்டம்

சீா்காழி தென்பாதியில் தனியாா் திருமண மண்டபத்தில் விநாயகா் சதுா்த்தி விழா ஊா்வலம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் காவல்துறை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் அண்ணாத... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் ஆட்சிமொழி பயிலரங்கம்

மயிலாடுதுறை தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழி பயிலரங்கம் நடைபெற்றது. அனைத்து அரசுத் துறை வாரியங்கள், கழகங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்க... மேலும் பார்க்க

அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்திய 50 போ் கைது

சென்னையில் தூய்மைப் பணியாளா்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மயிலாடுதுறையில் எல்.டி.யு.சி. சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற 50 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். சென்னை தூய்மை... மேலும் பார்க்க

குடும்ப அட்டைதாரா்களின் கவனத்துக்கு...

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசிய பொருள்கள் பெறாத குடும்ப அட்டைதாரா்கள் தங்களது குடும்ப அட்டையை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

தருமபுரம் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பாரத ஸ்டேட் வங்கி அலுவலா்கள் சங்கம் தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் தருமபுரம... மேலும் பார்க்க