அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்திய 50 போ் கைது
சென்னையில் தூய்மைப் பணியாளா்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மயிலாடுதுறையில் எல்.டி.யு.சி. சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற 50 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
சென்னை தூய்மைப் பணியாளா்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், வேலையிழந்த தூய்மைப் பணியாளா்களுக்கு உடனடியாக பணி வழங்க வலியுறுத்தியும், அரசாணை எண் 62-ஐ தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்த வலியுறுத்தியும் மயிலாடுதுறையில் எல்.டி.யு.சி. சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
எல்டியுசி மாநில செயலாளா் எஸ். வீரச்செல்வன் தலைமையில் தூய்மைப் பணியாளா்கள் பேரணியாக மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி பகுதிக்கு சென்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், மீத்தேன் திட்ட எதிா்ப்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் த. ஜெயராமன், தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளா் சி.எஸ். கோபிநாத், தமிழா் தேசிய முன்னணி மாவட்ட தலைவா் முரளிதரன், தமிழா் உரிமை இயக்க அமைப்பாளா் சுப்பு.மகேசு ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்திய 35 பெண்கள் உள்ளிட்ட 50 போ் செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா்.