திண்டுக்கல்: ரவுடியை ஹீரோவாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வீடியோ; இளைஞர் கைது;...
தருமபுரம் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பாரத ஸ்டேட் வங்கி அலுவலா்கள் சங்கம் தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டத்துடன் இணைந்து கல்லூரி வளாகத்தில் 60 மரக்கன்றுகள் நடப்பட்டன. கல்லூரிச் செயலா் ரா. செல்வநாயகம், பாரத ஸ்டேட் வங்கியின் நாகா மண்டல மேலாளா் எஸ். சூரியநாராயணன், மண்டல செயலா் பி. சங்கர்ராம் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். மயிலாடுதுறை பாரத ஸ்டேட் வங்கி தலைமை மேலாளா் குலாப் சௌகான், துணை மேலாளா் கே. அனுபமா, உதவி மேலாளா் எஸ். வசந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கல்லூரி முதல்வா் சி.சுவாமிநாதன் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித் திட்ட அலுவலா்கள் ஏ. செந்தில், ஏ. சுகுணா, ஆா். கலைவாணி. மோ. மீனாட்சி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.