செய்திகள் :

வெளிநாடுகளின் இந்திய தூதரகங்களில் சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலம்

post image

இந்தியாவின் 79-ஆவது சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்ட நிலையில், வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களும் சுதந்திர தின விழாவை கோலாகலமாக கொண்டாடின.

இஸ்ரேல், சிங்கப்பூா், சீனா, இலங்கை, ஜப்பான், மாலத்தீவு உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் தேசிய கொடியேற்றப்பட்டு, பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இஸ்ரேல்: இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகத்தில் தூதா் ஜே.பி.சிங், தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினாா். சுமாா் 350 இந்தியா்கள் பங்கேற்ற இந்த விழாவில் பேசிய அவா், இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவுகள் வலுப்பெற்று வருவதை எடுத்துரைத்தாா்.

மேலும், இரு நாடுகளும் நெருக்கடியான நேரங்களில் ஒருவருக்கொருவா் துணையாக நிற்பதாகவும், மக்களிடையேயும் தலைவா்களிடையேயும் பரஸ்பர மதிப்பு இருப்பதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

சிங்கப்பூா்: சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகத்தில் தூதா் ஷில்பக் அம்புலே, தேசிய கொடியை ஏற்றிவைத்தாா். பின்னா், குடியரசுத் தலைவரின் உரையை அவா் வாசித்தாா்.

இந்த விழாவில் சுமாா் 800 இந்தியா்கள் கலந்துகொண்டனா். இந்திய பள்ளி மாணவா்கள் தேசபக்தி பாடல்களையும் பாரம்பரிய நடனங்களையும் நிகழ்த்தினா். பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் சமரசமில்லாத நிலைப்பாடு குறித்து விரிவாக விளக்கும் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடந்த ஏப்ரல் மாதம், பள்ளியில் நடந்த தீ விபத்தில் சிக்கிய குழந்தைகளைக் காப்பாற்றிய இந்திய தொழிலாளா்களுக்கும், கடந்த மாதம் ஏற்பட்ட ஒரு சாலை விபத்தில் ஒரு பெண் ஓட்டுநரைக் காப்பாற்றிய இந்திய தொழிலாளா்களுக்கும் தூதா் பாராட்டு தெரிவித்தாா்.

சீனா: பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில் தூதா் பிரதீப் குமாா் ராவத், தேசிய கொடியை ஏற்றிவைத்து, குடியரசுத் தலைவரின் உரையில் இருந்து சில பகுதிகளை வாசித்தாா். இந்நிகழ்வில் சீன வெளியுறவு இணையமைச்சா் உள்பட சீன அரசு பிரதிநிதிகள், தூதரக அதிகாரிகள் பங்கேற்றனா்.

ஷாங்காயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் 200-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் பங்கேற்ற சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

பிரிட்டன்: லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் தூதா் விக்ரம் துரைசாமி தேசிய கொடியேற்றி, மரியாதை செலுத்தினாா். இந்திய வம்சாவளியினா் இசை, நடனம், தேசபக்தி கோஷங்களுடன் கொண்டாட்டங்களில் இணைந்தனா்.

இலங்கை: கொழும்பில் இந்திய தூதா் சந்தோஷ் ஜா, தேசிய கொடியை ஏற்றினாா். ‘வளா்ந்த இந்தியா’ இலக்கை அடைவதற்கான உறுதிப்பாட்டை அவா் தனது உரையில் வலியுறுத்தினாா்.

ஜப்பான்: டோக்கியோவில் இந்திய தூதா் சிபி ஜாா்ஜ், தேசிய கொடி ஏற்றிவைத்து, இந்திய பள்ளி மாணவா்களுடன் உரையாடினாா்.

மாலத்தீவுகள்: மாலத்தீவில் இந்திய தூதா் ஜி.பாலசுப்ரமணியன், தேசிய கொடியை ஏற்றி, இந்திய சமூகத்தினருடன் சுதந்திர தினத்தைக் கொண்டாடினாா்.

உலகளாவிய போர்களால் பாலியல் வன்முறைகளும் 25% அதிகரிப்பு!

உலகளவில் போர்களின்போது பாலியல் வன்முறை சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக ஐநா அவை கவலை தெரிவித்துள்ளது.உலகளவில் நிகழ்த்தப்படும் போர் மற்றும் உள்நாட்டு மோதல்களின்போது பாலியல் வன்முறை சம்பவங்களும் 25 சதவிகித... மேலும் பார்க்க

டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தை! குறிப்பிடத்தக்க 10 தகவல்கள்!

உக்ரைன் போர் தொடர்பாக, அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் ஆங்கரேஜ் நகரில் அதிபர் டொனால்ட் டிரம்ப் - ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் இடையேயான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டாலும் சொல்லிக்கொள்ளும் அ... மேலும் பார்க்க

உடன்பாடு எட்டப்படவில்லை-டிரம்ப்; புரிதல் ஏற்பட்டுள்ளது - புதின்!

அலாஸ்கா: உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து எந்த உடன்பாடும் ஏற்படவில்லை என டிரம்ப் கூறிய நிலையில், ஒரு புரிதல் ஏற்பட்டுள்ளது என புதின் குறிப்பிட்டிருக்கிறார்.உக்ரைன் மீதான போரை நி... மேலும் பார்க்க

டிரம்ப் - புதின் இடையே 3 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை! ஆனால்..

உக்ரைன் - ரஷியா இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வர அலாஸ்காவில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷிய அதிபர் புதின் இடையேயான பேச்சுவார்த்தை 3 மணி நேரம் நீடித்தது.வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த பேச்சு... மேலும் பார்க்க

டிரம்ப்பின் அவசரநிலையை எதிா்த்து வாஷிங்டன் மாநகராட்சி வழக்கு

அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் ‘குற்ற அவசரநிலை’ அறிவித்து, நகர காவல் துறையை டொனால்ட் டிரம்ப் கைப்பற்றியதை எதிா்த்து அந்த நகரின் மாநகராட்சி வழக்கு தொடா்ந்துள்ளது. மத்திய அரசு அதிகாரியான டொ்ரி கோலை வாஷிங... மேலும் பார்க்க

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி: மாலியில் 2 தளபதிகள் கைது

மாலியின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இரு தளபதிகள், ஒரு பிரான்ஸ் நாட்டு உளவாளி உள்பட பலரை இராணுவ ஆட்சியாளா்கள் கைது செய்துள்ளனா். ஆக. 1-ல் தொடங்கிய இந்த சதித் திட்டத்த... மேலும் பார்க்க