செய்திகள் :

உடன்பாடு எட்டப்படவில்லை-டிரம்ப்; புரிதல் ஏற்பட்டுள்ளது - புதின்!

post image

அலாஸ்கா: உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து எந்த உடன்பாடும் ஏற்படவில்லை என டிரம்ப் கூறிய நிலையில், ஒரு புரிதல் ஏற்பட்டுள்ளது என புதின் குறிப்பிட்டிருக்கிறார்.

உக்ரைன் மீதான போரை நிறுத்துவது குறித்து அலாஸ்காவில் வெள்ளிக்கிழமையன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுமார் 3 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் இரு தலைவர்களும் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர்.

இருவரும் பேசுகையில், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்பின்போது, உக்ரைன் - ரஷிய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்பதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

உக்ரைன் போர் குறித்த பேச்சுவார்த்தையில், தனக்கும் டிரம்புக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதாக புதின் கூறினார், மேலும் இந்த புதிய முன்னேற்றத்தை நாசமாக்க வேண்டாம் என்று ஐரோப்பாவுக்கு எச்சரிக்கையும் விடுத்தார்.

ஆனால் டிரம்ப் பேசுகையில், "ஒரு ஒப்பந்தம் ஏற்படும் வரை அது எந்த ஒப்பந்தமும் இல்லை" என்றார். உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் ஐரோப்பிய தலைவர்களுடன் விரைவில் பேச திட்டமிட்டுள்ளதாகவும், இங்கு நடந்த விவாதங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கமளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தையாக இது அமைந்ததாகவும், பல முக்கிய விவகாரங்களை தாங்கள் ஒப்புக்கொண்டதாகவும் கூறினார் டிரம்ப். ஆனால் மேலும் சில விஷயங்கள் விடுபடுவிட்டன. அதில் சில விவகாரங்கள் அவ்வளவு முக்கியமானவை அல்ல. ஒரு சில மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆனால், அவற்றை சரி செய்ய, மிகச் சிறந்த வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த இடத்தை அடைய முடியவில்லை என்றார்.

1945 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய போராக உக்ரைன் - ரஷிய போர் நடந்து வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இந்த பயங்கர போரை முடிவுக்குக் கொண்டு வர அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான உடன்பாடு எட்டப்படாமல் இரு தலைவர்களுக்கு இடையேயான சந்திப்பு முடிந்திருக்கிறது.

இருவரும் கூட்டாக செய்தியாளர் சந்திப்பை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அதற்கு பதிலாக மாறி மாறி சுருக்கமான கருத்துக்களை தெரிவித்துவிட்டு புறப்பட்டுவிட்டனர். முதலில் புதினும் பின்னர் டிரம்பும் புறப்பட்ட நிலையில், இருவருமே செய்தியாளர்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதிலளிக்காமல் வெளியேறியிருக்கிறார்கள்.

“There's no deal until there's a deal,” the U.S. president said, after Putin claimed they had hammered out an “understanding” on Ukraine and warned Europe not to “torpedo the nascent progress.” Trump said he would call Ukrainian President Volodymyr Zelenskyy and European leaders to brief them on the talks.

இதையும் படிக்க.. டிரம்ப் - புதின் இடையே 3 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை! ஆனால்..

அல்ஜீரியா: ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 18 பேர் பலி!

அல்ஜீரியா நாட்டில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 18 பேர் பலியாகினர்.வட ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் தலைநகர் அல்ஜியர்ஸில் பயணிகள் பேருந்து ஒன்று ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்தினையட... மேலும் பார்க்க

உலகளாவிய போர்களால் பாலியல் வன்முறைகளும் 25% அதிகரிப்பு!

உலகளவில் போர்களின்போது பாலியல் வன்முறை சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக ஐநா அவை கவலை தெரிவித்துள்ளது.உலகளவில் நிகழ்த்தப்படும் போர் மற்றும் உள்நாட்டு மோதல்களின்போது பாலியல் வன்முறை சம்பவங்களும் 25 சதவிகித... மேலும் பார்க்க

டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தை! குறிப்பிடத்தக்க 10 தகவல்கள்!

உக்ரைன் போர் தொடர்பாக, அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் ஆங்கரேஜ் நகரில் அதிபர் டொனால்ட் டிரம்ப் - ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் இடையேயான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டாலும் சொல்லிக்கொள்ளும் அ... மேலும் பார்க்க

டிரம்ப் - புதின் இடையே 3 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை! ஆனால்..

உக்ரைன் - ரஷியா இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வர அலாஸ்காவில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷிய அதிபர் புதின் இடையேயான பேச்சுவார்த்தை 3 மணி நேரம் நீடித்தது.வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த பேச்சு... மேலும் பார்க்க

டிரம்ப்பின் அவசரநிலையை எதிா்த்து வாஷிங்டன் மாநகராட்சி வழக்கு

அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் ‘குற்ற அவசரநிலை’ அறிவித்து, நகர காவல் துறையை டொனால்ட் டிரம்ப் கைப்பற்றியதை எதிா்த்து அந்த நகரின் மாநகராட்சி வழக்கு தொடா்ந்துள்ளது. மத்திய அரசு அதிகாரியான டொ்ரி கோலை வாஷிங... மேலும் பார்க்க

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி: மாலியில் 2 தளபதிகள் கைது

மாலியின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இரு தளபதிகள், ஒரு பிரான்ஸ் நாட்டு உளவாளி உள்பட பலரை இராணுவ ஆட்சியாளா்கள் கைது செய்துள்ளனா். ஆக. 1-ல் தொடங்கிய இந்த சதித் திட்டத்த... மேலும் பார்க்க