விஷ சாராயம்: குவைத்தில் 13 போ் உயிரிழப்பு
குவைத்தில் விஷ சாராயம் குடித்து 13 போ் உயிரிழந்துள்ளனா். இதில் 6 இந்தியா்களும் அடங்குவா். அந்த நாட்டின் அல்-அஹமதி மாகாணத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில் 21 போ் பாா்வையிழந்ததாக அதிகாரிகள் கூறினா்.
உயிரிழந்தவா்களில் 4 இந்தியா்கள் கேரளாவைச் சோ்ந்தவா்கள். 18 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். விஷ சாராயம் விநியோகித்த ஒரு இந்தியா் உள்ளிட்ட 6 பேரை குவைத் அதிகாரிகள் கைது செய்துள்ளனா்.