Modi: ``வாயால் வடை சுட்டு மக்களை ஏமாற்றுகிறார் மோடி" - சி.பி.எம் சண்முகம்
அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
அமைச்சர் ஐ.பெரியசாமி வீடு மற்றும் அவருக்கு நெருக்கமான நபர்களின் வீடுகளில் சனிக்கிழமை அதிகாலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.
சென்னை, மதுரை, திண்டுக்கல் என அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரான ஐ.பெரியசாமியின் சென்னை மற்றும் திண்டுக்கல்லில் உள்ள வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை அதிகாலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஐ.பெரியசாமியின் வீடு, சென்னை சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதியிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோன்று திண்டுக்கல் மாவட்டம் துரைராஜ் நகரில் உள்ள வீடு், திண்டுக்கல் மாவட்டம் சிலப்பாடியில் உள்ள பழனி சட்டப்பேரவை உறுப்பினரும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான ஜ.பி. செந்தில்குமார் வீட்டிலும் அதிகாலை முதல் தீவிர சோதனை நடைபெற்று வருகின்றன.
மேலும் ,வருகின்ற தேர்தல் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் குறுகிய நாள்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒவ்வொரு முறையும் பழைய வழக்குகள் குறித்து சுமார் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் வெவ்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக சோதனைகளில் ஈடுபடுவது வழக்கமானது.
தற்போது தொடர்ச்சியாக சனிக்கிழமை அதிகாலை முதல் ஐ. பெரியசாமி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.