செய்திகள் :

சென்னை மண்ணில் விழுந்தவர்களை விட எழுந்து வாழ்ந்தவர்களும், வென்றவர்களும் தான் அதிகம்! | #Chennaidays

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

நான் பிறந்து வளர்ந்த வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊரைவிட்டு கல்லூரி படிப்பிற்காக 2002ல் சென்னைக்கு வந்தேன். சென்னையில் படிப்பை முடித்ததும் சிறிது போராட்டத்திற்கு பிறகு சென்னையிலே வேலை கிடைத்தது.

இன்று 2025, சென்னை என் வாழ்க்கையில் பல ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்தி 23 வருடம் என்னையும் என் குடும்பத்தையும் மகிழ்ச்சியாக வாழவைத்துக் கொண்டிருக்கும் என் அன்னை சென்னைக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். 

முத்துக்களை தன்னுள் பொத்தி வைத்திருக்கும் சிப்பியைப் போல சென்னை இந்த உலகத்தில் உள்ள அத்தனை விஷயங்களையும் தன்னுள் வைத்திருப்பது வியப்பு.

கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும்போது வார விடுமுறையில் கையில் காசு இல்லையென்றாலும் கடற்கரையில் நண்பர்களோடு விளையாடி, ஸ்பென்சர் பிளாசா வணிக வளாகத்தில் நாள் முழுவதும் சந்தோஷமாக சுற்றி திரிந்த நாட்களை மறக்கவே முடியாது. 

மாதத்தில் ஒரு நாள் ரங்கநாதன் தெருவில் அந்த மதத்திற்கு தேவையான பொருட்களை மலிவான விலையில் வாங்கி பணத்தை சேமித்து அன்று ஒரு நாள் மட்டும் நண்பர்களோடு சேர்ந்து பனகல் பார்க் அருகில் இருந்த கரீம் பாய் தள்ளுவண்டி கடையில் பிரியாணி வாங்கி சாப்பிட்ட சுவை இன்றும் எங்கள் நினைவில் இருக்கிறது.

அன்று சென்னை அண்ணாசாலை ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக்கடையில் புத்தகம் வாங்குவதுபோல் சென்று பல அறிய புத்தகங்களை பல மணி நேரம் படித்து அறிவை வளர்த்துக்கொண்டதற்கு நன்றி கடனாக இன்று மாதத்தில் ஒருமுறையாவது ஹிக்கின்பாதம்ஸ் சென்று ஒரு புத்தகமாவது வாங்கிவிடுவேன். 

நுங்கம்பாக்கம் லேண்ட்மார்க் புத்தகக்கடையில் சினிமா பாடல் குறுந்தகடு வாங்குபவர்கள் பாடல் மாதிரி கேட்பதற்காக ஹெட்ஃபோன்கள் வைத்திருப்பார்கள் அதில் இலவசமாக ஏ.ஆர். ரஹ்மானின் புது பாடல்களை கேட்ட நினைவுகள் இனிமையானவை.

சென்னையில் டீ கடை தான் என் வயிற்று பசியை பல நாள் தேற்றியது. சென்னை சூளைமேடு ஹை ரோட்டில் மனோ டீ கடையில் எங்களை பார்த்ததும் டீ மாஸ்டர் மூர்த்தி அண்ணா புன்னகையோடு “வாங்க தம்பி” என்று அழைத்து டீ மேலே பால் ஏடு போட்டு அதன் மேலே  சர்க்கரை  தூவி தருவார் ஆஹா… ஆஹா… அமிர்தம் போல் இருக்கும் அதன் சுவை. டீ கடைக்கு வருபவர்களிடம் மூர்த்தி அண்ணா உள்ளூர் முதல் உலக அரசியல் வரை பேசும் பேச்சு மிக தெளிவாக இருக்கும். மோடி அவர்கள்   நம் நாட்டின் பிரதமராக பதவியேற்ற பொழுது எனக்கு மூர்த்தி அண்ணா தான் நினைவுக்கு வந்தார், மூர்த்தி அண்ணாவிற்கும் வாய்ப்பு கிடைத்திருந்தால் நிச்சயம் அரசியலில் பெரிய பதவிக்கு வந்திருப்பார்.

சத்தியம் தியேட்டரில் தலைவர் ரஜினிகாந்த் படம் சந்திரமுகி பார்த்தது, மெரினா கடற்கரையில் டிசம்பர் 31 இரவு நண்பர்களோடு சேர்ந்து புத்தாண்டை வரவேற்றது, அண்ணா சாலையில் LIC மாளிகையை கடக்கும் போதெல்லாம் உலக அதிசயம் போல் தலையை உயர்த்திப் பார்த்தது என்று பல இனிமையான நினைவுகள் கடற்கரையை உரசும் அலையை போல் மனதை வருடுகிறது.

படிப்பை முடித்து வேலை தேடிய நாட்களில் நான் தந்தையிடமும், ஆசிரியரிடமும் படிக்க தவறிய வாழ்க்கையின் பாடங்களை சென்னை எனக்கு கற்றுத்தந்தாள். 

சமத்துவம், எல்லோருக்கும் எல்லாம் என்ற தத்துவத்தை ஏற்றுக்கொண்டால் மட்டும்தான் சென்னை நம்மை அணைத்துக்கொள்வாள். ஒரு சிறு அறையில் நண்பர்களோடு சேர்த்து 10 பேர் தங்கி உணவு, உடை பகிர்ந்து ஓவ்வொருவரும் தங்கள் இலட்சியத்தை நோக்கி தினம் தினம் ஓடிய நாட்களை இன்று நினைத்தால் கண்கள் கலங்குகிறது.

சென்னை மண்ணில் விழுந்தவர்களை விட எழுந்து வாழ்ந்தவர்களும், வென்றவர்களும் தான் அதிகம். சென்னையில் நாம் சந்திக்கும் ஓவ்வொரு மனிதர்களும் நமக்கு எதாவது ஒரு வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்.  சிற்பத்தை செதுக்கும் சிற்பியைப்போல் சென்னை என்னை முழுமையான மனிதனாக மாற்றியது. 

உலகமயமாக்கல், பொருளாதார வளர்ச்சி திட்டங்கள், தொழில் புரட்சி என இயற்கைக்கு எதிரான அத்தனை திட்டங்களையும் தன்னுள் வாங்கிக்கொண்டு கவசம்போல் தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களையும், கிராமங்களையும் பழமை மாறாமல் காப்பாற்றும் ஒப்பற்ற வந்தாரை வாழவைக்கும் அன்னை நம்ம சென்னை.

- வீரா

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

சென்னை உலகத்திற்குள் ஒரு நாள்! - இளைஞரின் அனுபவப் பகிர்வு |#Chennaidays

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சென்னையின் நிசப்தமான இரவுகளும் நீளமான பயணங்களும் : போராட்டம், நம்பிக்கை கலந்த காவியம் | #Chennaidays

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

கஷ்டப்பட்ட காலங்களில் கூட விகடன் வாங்குவதை நிறுத்தியதில்லை! - நெகிழ்ச்சி பகிர்வு #நானும்விகடனும்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

மெயின்கார்ட்கேட் காலனியின் எளிய விருந்தாளிகள்- 70களில் திருச்சி | கிறிஸ்துமஸ் இரவுகள் 4 | #Trichy

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

மூவேந்தரை மூழ்கடித்த வேளிர்குல வேந்தன்! - ஒரு தேசத்தின் பெருங்கனவு | #என்னுள்வேள்பாரி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

எங்கள் மொட்டை மாடி அரட்டைகளை அர்த்தமுள்ளதாக்கிய விகடன்! - ரசனையின் வழிகாட்டி | #நானும்விகடன்