சௌதி சூப்பர் கோப்பையில் சர்ச்சை: அல்-நாஸர் வீரருக்கு ரெட் கார்டு!
சௌதி சூப்பர் கோப்பையின் அரையிறுதியில் அல்-நாஸர் வீரர் சடியோ மானேவிற்கு வழங்கப்பட்ட ரெட் கார்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அல்-நாஸர் வீரர் சடியோ மானே சௌதி சூப்பர் கோப்பையில் பந்தை துரத்திச் செல்லும்போது எதிரணியினர் கோல் கீப்பரின் மீது மோதியதால் இந்த ரெட் கார்டு வழங்கப்பட்டுள்ளது.
செனகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் சடியோ மானே (33 வயது) சௌதி லீக்கில் ரொனால்டோ விளையாடும் அல்-நாஸர் அணியில் விளையாடுகிறார்.
அரையிறுதியில் அல்-இத்திஹாத் கிளப் உடன் அல்-நாஸர் அணி மோதுகிறது. போட்டியின் 10-ஆவது நிமிஷத்திலேயே சடியோ மானே கோல் அடித்து அசத்தினார்.
சிறிது நேரத்திலேயே ( 16’) எதிரணியும் கோல் அடித்து 1-1 என சமன் செய்தது.
இந்தப் போட்டியில் 25-ஆவது நிமிஷத்தில்தான் சடியோ மானே பந்தை துரத்திச் செல்லும்போது எதிரணியினர் கோல் கீப்பரின் மீது மோதினார்.
விஏஆர் சோதனைக்குப் பிறகு அவருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. ரொனால்டோவும் இதில் வருத்தமடைந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
முக்கியமான போட்டியில் இப்படி நடந்தது ரொனால்டோ ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
How on earth this was a red card for Sadio Mane ? #NASITT#AlNassr
— The Final Whistle (@Rufus_45) August 19, 2025
pic.twitter.com/ogARPYXJwz