பிக்பாஸ் தமிழ் சீசன் 9 விரைவில்! இந்தாண்டு இன்னும் ஸ்பெசல் - அதிகாரப்பூர்வ அறிவி...
ஆகஸ்ட் 22ல் தொடங்கும் கிளாசிக் எலக்ட்ரோட்ஸ் ஐபிஓ!
மும்பை: வெல்டிங் எலக்ட்ரோட்ஸ் மற்றும் எம்ஐஜி கம்பிகள் உற்பத்தியாளரான கிளாசிக் எலக்ட்ரோட்ஸ் (இந்தியா) லிமிடெட், அதன் ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டிற்கு, பங்கிற்கு ஒன்றுக்கு ரூ.82 முதல் ரூ.87 என நிர்ணயித்து அறிவித்தது. இதன் மூலம் நிறுவனம் மொத்தம் ரூ.41.50 கோடி திரட்ட இலக்கு வைத்துள்ளது.
இந்த ஐபிஓ முற்றிலும் 47.71 லட்சம் ஈக்விட்டி பங்குகளின் புதிய வெளியீடாகும். வரும் ஆகஸ்ட் 22 மூதல் சந்தாவிற்காக திறந்து, மீண்டும் ஆகஸ்ட் 26, 2025 அன்று முடிவடையும் என்று நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. வெளியீட்டிற்குப் பிறகு, பங்குகள் நிஃப்டி-யில் பட்டியலிடப்படும்.
ஐபிஓ வருமானத்தை பயன்படுத்தி ஆலை மற்றும் இயந்திரங்களை வாங்குவதற்கான மூலதன செலவினங்களுக்கு நிதியளிக்கவும், சில நிலுவையில் உள்ள கடன்களை திருப்பிச் செலுத்தவும், பணி மூலதனத் தேவைகளுக்கு நிதியளிக்கவும் முன்மொழிந்துள்ளது நிறுவனம். அதே வேளையில் மேற்கு வங்கம் மற்றும் ஹரியானாவில் இரண்டு உற்பத்தி அலகுகளைக் கொண்டுள்ளது.
பிப்ரவரி 28, 2025 வரையிலான 11 மாதங்கள் முடிய கிளாசிக் எலக்ட்ரோடுகள் ரூ.187.60 கோடி வருவாயைப் பதிவு செய்துள்ளது. பிப்ரவரி 2025 வரையிலான 11 மாத காலத்தில் வரிக்குப் பிந்தைய லாபமாக ரூ.9.51 கோடியாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.
நிதியாண்டு 2024ல் ரூ.194.40 கோடி வருவாயையும், வரிக்குப் பிந்தைய லாபமாக ரூ.12.29 கோடியையும் ஈட்டியுள்ளது.
இதையும் படிக்க: ஆம்பர் எண்டர்பிரைசஸ் பங்குகள் 8 சதவிகிதம் உயர்வு!