பிக்பாஸ் தமிழ் சீசன் 9 விரைவில்! இந்தாண்டு இன்னும் ஸ்பெசல் - அதிகாரப்பூர்வ அறிவி...
"திருமாவளவன் தூய்மைப் பணியாளர்களைப் பற்றி அப்படி பேசவில்லை" - வன்னி அரசு விளக்கம்!
13 நாள்கள் தனியார்மயத்தை எதிர்த்தும், பணிநிரந்தரம் கோரியும் சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராடிய தூய்மைப் பணியாளர்களை இரவோடு இரவாக கைது செய்து, அங்கிருந்து அப்புறப்படுத்தியது திமுக அரசு.
இதையடுத்து தனியார் நிறுவனத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்கள் பணி செய்தால் தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு சலுகைகள் பல வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ஆனால், பணிநிரந்தரம் வேண்டும், தனியார்மயம் வேண்டாம் என்பதே தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையாக உறுதியாக நிற்கின்றனர். பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் வெடித்த வண்ணமிருக்கின்றன.
தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கூடாது
இதுகுறித்து தனது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், “குப்பை அள்ளுகிறவர்களை பணி நிரந்தரம் செய்து, அந்தத் தொழிலையே நீங்களே செய்து கொண்டிருங்கள் என்று சொல்லுவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. சாக்கடையை சுத்தம் செய்கிறவனே சாக்கடையைச் சுத்தம் செய்யட்டும் என்கிற கருத்துக்கு இது வலுச் சேர்ப்பதாக இருக்கிறது.
இதைப் போய் போராடுகின்ற தூய்மைப் பணியாளர்களிடம் சொன்னால், அவர்களுக்கு எதிராக நாம் பேசுகிறோம் என்று கருதுவார்கள். அதனால் தான் நாமும் பணி நிரந்தரம் செய்யுங்கள் என்று சொல்ல நேர்ந்தது. அவர்களை பணி நிரந்தரம் செய்யக் கூடாது என்று சொல்வது தான் சரியான கருத்து. குப்பை அள்ளுபவர்களின் பிள்ளைகள் தான் குப்பையை அள்ள வேண்டுமா?" என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் தூய்மைப் பணியாளர்கள் போராடிவரும் சமயத்தில் திருமாவளவன் இப்படி பேசியது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இதற்கு விளக்கமளித்திருக்கும் விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, ``தூய்மைப் பணியாளர்களில் 90 சதவீதத்தினர் குறிப்பிட்ட தலித் சமூகத்தை சார்ந்தவர்கள்தான் அவர்கள் மட்டுமே தொடர்ந்து இப்பணியில் தொடரவேண்டுமா?
.jpeg)
தனது கர்மா யோகி நூலில், ‘தூய்மைப் பணி, கடவுளுக்கு செய்யும் தொண்டு' என்றார் பிரதமர் மோடி; குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அப்பதவிக்கு அறிவிக்கப்பட்டவுடன் கோவிலில் தூய்மை பணியில் ஈடுபட்டதை பெருமையாக பகிர்ந்தார். இந்த கர்மாவைத்தான் விசிக எதிர்க்கிறது எதிர்காலத்தில் எந்த சமூகத்தினரும் மனிதக்கழிவை அகற்றும் பணியை செய்யக் கூடாது என்பதே விசிக-வின் தொலைநோக்கு பார்வை. இதுதான் இடதுசாரி பார்வை திருமாவளவனின் இந்த சமூகநீதிப்பார்வை இந்தியா முழுக்க விரைவில் எதிரொலிக்கும்.
சமூகநீதிப்பார்வையில் சொல்லப்பட்ட கருத்து' "தூய்மை பணிக்கு விரும்பி யாரும் வரவில்லை. அது காலங்காலமாக திணிக்கப்பட்ட வன்கொடுமை; காலங்காலமாக குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களே தூய்மைப் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். இதை யோசித்து, சமூகநீதிப்பார்வையில் சொல்லப்பட்ட கருத்துதான் அது” என்று பேசியிருந்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs