செய்திகள் :

பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

post image

பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார்.

இன்று(ஆக. 18) இது குறித்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களுக்கான திட்டம் குறித்து விரிவான ஆலோசனை நடத்தியதாகவும், அனைத்து துறைகளிலும் விரைவான சீர்திருத்தங்களை மேற்கொள்ள நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்றும் தமது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மக்களின் வாழ்வாதாரத்தை வாழ்க்கை முறையை எளிமைப்படுத்தல், வணிகம், தொழில் செய்வதை எளிமையாக்குதல் மற்றும் செழிப்பு ஆகியவற்றை ஊக்கப்படுத்த இந்த சீர்திருத்தங்கள் உதவும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முக்கிய அமைச்சர்கள், உயர்நிலை செயலர்கள், பொருளாதார நிபுணர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

Chaired a meeting to discuss the roadmap for Next-Generation Reforms. We are committed to speedy reforms across all sectors, which will boost Ease of Living, Ease of Doing Business and prosperity.

சுபான்ஷு சுக்லாவையும் விடமாட்டீர்களா? விமர்சிக்கும் காங்கிரஸ்!

சுபான்ஷு சுக்லாவை வைத்து சிலர் அரசியல் ஆதாயம் ஈட்ட முற்படுவதாக காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சுக்லா விமர்சித்துள்ளார். ராஜீவ் சுக்லா பேசியதாவது: “தேர்தல் ஆணையத்துக்கு எதிரான எங்களுடைய போராட்டம் தொடரும். பி... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா!

விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் குறித்து கேட்டறிந்த பிரதமர் நரேந்திர மோடி, சுக்லாவை பாராட்டினார்.சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெற்றிப்பயணம் மேற்கொண்ட பின் சுபான்ஷு சுக்லா, முதல்ம... மேலும் பார்க்க

3-ஆவது திருமணத்துக்குப் பின் காதலனுடன் ஓடிய இளம்பெண்: பேத்தியைக் கொன்று வீசிய தாத்தா - பாட்டி!

3-ஆவது திருமணம் செய்துகொண்ட இளம்பெண் ஒருவர் அதன்பின் தனது காதலனுடன் ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைத்தொடர்ந்து, அந்தப் பெண்ணின் 6 வயது மகளை, பெண்ணின் பெற்றோர் கொன்று வீசிய கொட... மேலும் பார்க்க

‘சிஸ்டம் கெட்டுப்போச்சு!’ பிகாரிலும் இந்தியாவிலும் மிக மோசமான சூழல்! -லாலுவின் மகன் விமர்சனம்

பிகாரிலும் இந்தியாவிலும் மிக மோசமான சூழல் நிலவுவதாக லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் விமர்சித்துள்ளார். ‘எமர்ஜென்ஸி காலத்தைவிட மோசமான சூழல் இப்போது நாட்டில் நிலவுகிறது’ என்று ராஷ்திரிய ஜனத... மேலும் பார்க்க

சுங்கச் சாவடியில் ராணுவ வீரரை கட்டி வைத்து அடித்த இளைஞர்கள்! 6 பேர் கைது!

உத்தரப் பிரதேசத்தில் சுங்கச் சாவடியில் ஏற்பட்ட தகராறு காரணமாக ராணுவ வீரரை அங்குள்ள சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விடியோ இணையத்தில் பலர... மேலும் பார்க்க

மருத்துவமனையிலிருந்து விடியோ வெளியிட்ட நவீன் பட்நாயக்!

ஒடிஸா முன்னாள் முதல்வரும் பிஜு ஜனதா தள கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் மருத்துவமனையில் இருந்தவாறு இன்று (ஆக. 18) விடியோ வெளியிட்டுள்ளார். சிகிச்சைக்காக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையி... மேலும் பார்க்க