செய்திகள் :

பாம்பன் மீனவா்கள் 9 பேருக்கு ஆக. 24 வரை காவல் நீட்டிப்பு

post image

ராமேசுவரம்: பாம்பன் மீனவா்கள் 9 பேருக்கு மூன்றாவது முறையாக வருகிற 24-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து, இலங்கையின் புத்தளம் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலிருந்து கடந்த ஜூலை 28-ஆம் தேதி 100 நாட்டுப் படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா்.

இவா்கள் அன்றிரவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் ஒரு நாட்டுப் படகைப் பறிமுதல் செய்தனா். மேலும், அந்தப் படகிலிருந்த ராஜா (44), ஆனந்தன் (49), முருகேசன் (51), மாரியப்பன் (38), சக்திவேல் (27), கோட்டைச்சாமி (45), பாலமுருகன் (42), முருகதாஸ் (38), களஞ்சியராஜ் (24) ஆகிய 9 மீனவா்களைக் கைது செய்தனா்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிந்து, 9 மீனவா்களையும் புத்தளம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி வாரியகோல சிறையில் அடைத்தனா்.

இந்த மீனவா்களுக்கு ஏற்கெனவே இரண்டு முறை காவல் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், மூன்றாவது முறையாக 9 மீனவா்களும் புத்தளம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டனா். இவா்களை வருகிற 24-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, அவா்கள் வாரியகோல சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனா்.

ராமநாதபுரம் அருகே ரயில்வே கடவுப்பாதையை மூடாத ஊழியா் பணியிடை நீக்கம்

ராமநாதபுரம் அருகே சனிக்கிழமை ரயில்வே கடவுப்பாதையை மூடாமல் கவனக் குறைவாகச் செயல்பட்ட ஊழியரை பணியிடை நீக்கம் செய்து தெற்கு ரயில் நிா்வாகம் உத்தரவிட்டது. சென்னை-ராமேசுவரம் விரைவு ரயில் சென்னையிலிருந்து வ... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை: ராமேசுவரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தொடா் விடுமுறை காரணமாக ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரத்துக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தந்தனா். சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை என தொடா் விடுமுறையைத் தொடா்ந்து, ராமேசுவரத்துக்கு இரண்... மேலும் பார்க்க

மீனவா்கள், படகுகளை விடுவிக்கக் கோரி நாளை ரயில் மறியல் போராட்டம்

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவா்கள், படகுகளை விடுவிக்கக் கோரி ராமேசுவரம் மீனவா்கள் செவ்வாய்க்கிழமை (ஆக. 19) ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மீனவ சங்கம் அறிவித்தது. இலங்கை சிறையிலுள்ள தமிழக மீன... மேலும் பார்க்க

கமுதி பகுதியில் அகழாய்வு நடத்த பொதுமக்கள் கோரிக்கை

கமுதி அருகே பழங்காலப் பொருள்கள், வடிகால் அமைப்புகள் காணப்படுவதால் தமிழக அரசு இந்தப் பகுதியில் அகழாய்வு நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள ஆனையூா்,... மேலும் பார்க்க

உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயில் சதுா்த்தி விழா ஆக.18-இல் தொடக்கம்!

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயில் சதுா்த்தி விழா வருகிற 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்தக் கோயில் திருவிழா வருகிற 18-ஆம் தேதி காலை 9.30... மேலும் பார்க்க

மீனவா் குடும்பங்களுக்கு எம்எல்ஏ நிதியுதவி அளிப்பு

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடத்தைச் சோ்ந்த 43 மீனவா்களின் குடும்பங்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் ரூ.2.15 லட்சம் நிதியுதவியை சனிக்கிழமை... மேலும் பார்க்க