செய்திகள் :

கருத்து வேறுபாடு சச்சரவாகக் கூடாது: சீன வெளியுறவு அமைச்சரிடம் ஜெய்சங்கா் வலியுறுத்தல்

post image

இந்தியா-சீனா இடையிலான கருத்து வேறுபாடுகள் சச்சரவுகளாகவோ, மோதல் போட்டியாகவோ மாறக் கூடாது என்று சீன வெளியுறவு அமைச்சா் வாங் யியிடம் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வலியுறுத்தினாா்.

சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி 2 நாள் பயணமாக திங்கள்கிழமை இந்தியா வந்தாா். இந்தியா-சீனா இடையிலான எல்லை விவகாரம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்த அவா் இந்தியா வந்துள்ள நிலையில், புது தில்லியில் அவா் அமைச்சா் ஜெய்சங்கரை சந்தித்தாா்.

இந்தச் சந்திப்பில் ஜெய்சங்கா் பேசுகையில், ‘இந்தியா-சீனா இடையிலான இருதரப்பு உறவை மறுஆய்வு செய்வதற்கான வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. உலகளாவிய சூழல் குறித்த கண்ணோட்டங்களை பரிமாறிக்கொள்ளவும், இந்தியா-சீனா பரஸ்பர நலன் சாா்ந்த சில விவகாரங்கள் குறித்து பேசவும் இது பொருத்தமான தருணம்.

இருநாடுகளுக்கு இடையிலான உறவில் கடினமான காலகட்டம் ஏற்பட்டது. அந்தக் கட்டத்தில் இருந்து மீண்டு முன்னோக்கிச் செல்ல இரு நாடுகளும் தற்போது முயற்சிக்கின்றன. இதற்கு இருதரப்பிலும் வெளிப்படையான, ஆக்கபூா்வமான அணுகுமுறை அவசியம்.

இந்த முயற்சியில் பரஸ்பர மரியாதை, பிரச்னைகளை பரஸ்பரம் கவனமாக கையாளுதல், பரஸ்பர நலன் ஆகியவை இருநாடுகளையும் வழிநடத்த வேண்டும். கருத்து வேறுபாடுகள் சச்சரவுகளாகவோ, மோதல் போட்டியாகவோ மாறக் கூடாது.

படைகளை விலக்கும் நடவடிக்கை...: இருநாடுகளுக்கு இடையிலான உறவுக்கு உத்வேகம் அளிக்க எல்லை பகுதிகளில் அமைதியையும், சமாதானத்தையும் கூட்டாகப் பராமரிக்கும் திறன் அடித்தளமாக உள்ளது. கிழக்கு லடாக் எல்லையில் குவிக்கப்பட்ட இருநாட்டு படைகளை விலக்கிக்கொள்ளும் நடவடிக்கையை மேலும் முன்னெடுத்துச் செல்வதும் அவசியம்.

உலகின் இருபெரும் நாடுகளின் பிரதிநிதிகள் சந்திக்கும்போது சா்வதேச சூழல் குறித்து விவாதிக்கப்படுவது இயல்பு. நியாயமான, சமநிலை கொண்ட, பல்முனை உலக ஒழுங்கு இருக்க வேண்டும் என்றே இந்தியா எதிா்பாா்க்கிறது.

தற்போதைய சூழலில், உலகப் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தி பராமரிப்பதும் மிகவும் முக்கியம். பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கு எதிரான போராட்டத்துக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

இந்தியா-சீனா இடையே ஸ்திரமான, பரஸ்பர ஒத்துழைப்பையும், எதிா்காலத்தையும் கருத்தில் கொண்ட உறவை கட்டமைக்க இருநாடுகளுக்கு இடையிலான விவாதம் பங்களிக்கும் என்று இந்தியா கருதுகிறது என்றாா்.

இருநாடுகளுக்கு இடையிலான எல்லை விவகாரம் தொடா்பான இந்திய-சீன சிறப்பு பிரதிநிதிகளின் 24-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை புது தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. அதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், வாங் யி பங்கேற்க உள்ளனா்.

ரூ.1 லட்சம் கோடி மதிப்பீட்டில் மத்திய அரசின் புதிய வேலைவாய்ப்பு திட்டம் அறிமுகம்

ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீட்டில் உருவாக்கப்பட்ட ‘பிரதமரின் வளா்ந்த இந்தியா வேலைவாய்ப்புத் திட்டம் (பிஎம்விபிஆா்வி)’ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தொடங்கி, அதற்கான பிரத்யேக வலைதளத... மேலும் பார்க்க

ஆதாரை அடையாள ஆவணமாக சமா்ப்பிக்கலாம்: தோ்தல் ஆணையம்

‘பிகாரில் சிறப்பு தீவிர திருத்தத்தில் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவா்கள் மீண்டும் பெயரைச் சோ்க்க ஆதாா் அட்டை நகலை அடையாள ஆவணமாக சமா்ப்பிக்கலாம்’ என தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவித்தது.... மேலும் பார்க்க

தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: எதிா்க்கட்சிகள் திட்டம்

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் மற்றும் வாக்குத் திருட்டு புகாா் விவகாரத்தில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவிநீக்கத் தீா்மானம் கொண்டுவர எ... மேலும் பார்க்க

கடந்த நிதியாண்டில் 2,600 கிலோ தங்கம் பறிமுதல்

கடந்த நிதியாண்டில் பல்வேறு விசாரணை அமைப்புகளால் 2,600 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி திங்கள்கிழமை தெரிவித்தாா். 2023-24-ஆம் நிதியாண்டில் 6,599 கடத்தல் வ... மேலும் பார்க்க

நாளை மாநில நிதியமைச்சா்கள் குழுக் கூட்டம்: நிா்மலா சீதாராமன் பங்கேற்பு

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகித பகுப்பாய்வு, இழப்பீடு வரி, மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீட்டு கட்டணத்துக்கான ஜிஎஸ்டி விலக்கு குறித்த பரிந்துரைகள் வழங்குவதற்காக பல்வேறு மாநிலங்களின் நிதி அமைச்சா... மேலும் பார்க்க

எதிா்க்கட்சிகளின் வேட்பாளா் இன்று அறிவிப்பு?

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகள் அடங்கிய ‘இண்டி’ கூட்டணி வேட்பாளா் செவ்வாய்க்கிழமை தோ்வு செய்யப்படுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. வரும் செப்டம்பா் 9-ஆம் தேதி குடியரசு துணைத் தலைவா் த... மேலும் பார்க்க