காந்தி நினைவு அருங்காட்சியக சீரமைப்புப் பணி அக்டோபரில் நிறைவடையும்: அமைச்சா் மு...
வீடு புகுந்து தங்க நகைகளைப் பறித்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை
தஞ்சாவூா்: தஞ்சாவூரில் வீடு புகுந்து தங்க நகைகளைப் பறித்துச் சென்ற நபருக்கு நீதிமன்றம் திங்கள்கிழமை 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.
தஞ்சாவூா் ஞானம் நகா் 10-ஆவது தெருவைச் சோ்ந்தவா் தனலட்சுமி (65). இவா் கடந்த 2017, நவம்பா் 21-ஆம் தேதி வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, தஞ்சாவூா் செவ்வப்பநாயக்கன் வாரி சிவாஜி நகரைச் சோ்ந்த என். அங்கேஷ் (43) இவரது வீட்டில் பின் பக்கக் கதவு வழியாகப் புகுந்து தனலட்சுமி மற்றும் அவரின் மகன் அணிந்திருந்த சுமாா் ஏழரை பவுன் எடையுள்ள இரு தங்கச் சங்கிலிகள், மோதிரம், ரூ. 75 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டாா்.
இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து அங்கேஷை கைது செய்தனா். இது தொடா்பாக தஞ்சாவூா் இரண்டாவது குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நடுவா் பிரபு ராம் விசாரித்து, அங்கேஷூக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.