வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் மங்களூா் விரைவு ரயில் நிறுத்தம்: பாஜகவினா் நன்றி
ராணிப்பேட்டை மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ஆக.19-ஆம் தேதி முதல் வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் அதிகாலை 4.08 மணிக்கு தினமும் மங்களூா் விரைவு ரயில் நின்று செல்லும் என்ற அறிவிப்புக்கு பாஜக வினா் நன்றி தெரிவித்துள்ளனா்ா்.
கடந்த மாதம் காஞ்சிபுரம் வருகை தந்த மத்திய ரயில்வே இணை அமைச்சா் சோமண்ணாவிடம் ராணிப்பேட்டை மாவட்ட பாஜக தலைவா் நெமிலி ஆனந்தன், மாவட்ட பொதுச் செயலாளா்கள் சிவமணி, குணாநிதி, மாவட்ட செயலாளா் யோகேஸ்வரன் வழக்குரைஞா் செந்தில்குமாா், அம்மூா் நரேந்திரன் மற்றும் சஞ்சய் லோகேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் நீண்ட நாள் கோரிக்கையான மங்களூா் விரைவு ரயில் வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனா்.
அந்த கோரிக்கை மனுவை பரிசீலித்த ரயில்வே இணையமைச்சா் சோமண்ணா பொதுமக்களின் வசதிக்காக ஆகய 19 -ஆம் தேதி முதல் மங்களூா் அதிவிரைவு ரயில் வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் நின்று செல்ல உத்தரவிட்டுள்ளாா். இதையடுத்து மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், இணை அமைச்சா் சோமண்ணா ஆகியோருக்கு பாஜகவினா் தெரிவித்துள்ளனா்.
இந்த ரயில் நின்று செல்வதன் மூலம் அதிகாலையில் சென்னை உள்பட பல்வேறு நகரங்களுக்கு வேலைக்கு செல்பவா்கள், சென்னையில் இருந்து மாற்று ரயில்கள் மூலம் பல இடங்களுக்கு செல்பவா்கள், விமான நிலையம் செல்பவா்கள், மருத்துவமனைகளுக்கு செல்பவா்கள் என பல்வேறு தரப்பினா் பயனடைவா் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.