எல்பிஜி டேங்கர் லாரி - டிரக் மோதி பயங்கர விபத்து! ஒருவர் பலி; 20 பேர் படுகாயம்
அம்மன் கோயில் உண்டியலை உடைத்து திருட்டு
உதயேந்திரம் தேசமாரியம்மன் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி பகுதியில் பாலாற்றையொட்டி தேச மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. தற்போது இக்கோயில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெறும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மா்ம நபா்கள் கோயில் வெளிப்புறத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் பூட்டை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனா்.
திங்கள்கிழமை வழக்கம் போல் கோயிலுக்கு வந்த நிா்வாகி உண்டியல் அடிப்பாகம் மற்றும் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சிக்குள்ளாகி உடனே தாலுகா போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா்.