செய்திகள் :

சாத்தூர் பிரதான சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: மக்கள் அச்சம்!

post image

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பிரதான சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். வேறு ஏதும் அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு முன்பு நெடுஞ்சாலை துறை விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பிரதான சாலையில் பள்ளிகள், வங்கிகள், பேருந்து நிலையம், கோயில்கள், மருத்துவமனைகள் என அனைத்தும் உள்ளது.

இந்நிலையில், சாத்தூர் பிரதான சாலையில் காமராஜர் ஆட்சி காலத்தில் போடப்பட்ட பாதாள சாக்கடை மூடப்பட்டு புதிய பாதாள சாக்கடை அமைக்கப்பட்டு சாலை போடப்பட்டுள்ளது. சாலை அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுக்குள் குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு அங்கங்கே பள்ளம் தோண்டப்பட்டு சரி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென நந்தவனப் பட்டு தெரு அருகே சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டது. பள்ளத்தின் அருகே அதிக அளவில் அதிர்வு ஏற்படுவதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் சாலையை கடந்து வருகின்றனர். இந்த பள்ளத்தால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும், அலுவலகம் செல்லும் பணியாளர்களும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

எனவே, இந்த பள்ளத்தை வேறு ஏதும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் விரைவில் சரி செய்ய நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்கள் கோரிக்கையாக உள்ளது. நெடுஞ்சாலைத் துறை விரைந்து நடவடிக்கை எடுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆக. 25 -இல் இந்தியா - வங்கதேசம் எல்லை பேச்சுவாா்த்தை

The public is terrified after a sudden pothole appeared on the main road in Sattur, Virudhunagar district.

மோடி அமைச்சரவையில் குற்றப் பின்னணி கொண்ட 39% பேர் மீது 130-ஆவது சட்டப் பிரிவு பாயுமா?

மோடியின் அமைச்சரவையில்39சதவிகிதம் பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள். இவர்கள் மீதெல்லாம்130-ஆவது சட்டப் பிரிவு பாயுமா? என கேள்வி எழுப்பியுள்ள திமுக எம்.பி. ஆ.ராசா, அமித்ஷாவின் மிரட்டல் உருட்டல்களுக்கு எ... மேலும் பார்க்க

மதுபோதையில் கிணற்றில் குதித்து இளைஞர் தற்கொலை: காப்பாற்ற முயன்றவரும் நீரில் மூழ்கி பலி

அவிநாசி: அவிநாசி அருகே மது போதையில் இளைஞர் கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அப்போது அவரை காப்பாற்ற சென்ற இளைஞரும் கிணற்று நீரிழ் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ... மேலும் பார்க்க

தங்கம் விலை அதிரடியாக உயர்வு: எவ்வளவு?

சென்னையில் தங்கம், வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சனிக்கிழமை தங்கம் பவுனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.75,520-க்கு விற்பனையாகிறது.தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வதும், அதனைத் தொடர்ந்து சில நாள... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடித்து வருகிறது. மேட்டூர் அணைக்கு சனிக்கிழமை காலை 6 மணிக்கு நீர்வரத்து வினாடிக்கு 19,850 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து காவேரி டெல்டா பாசனத்திற்க... மேலும் பார்க்க

சென்னையில் மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் பலி: மக்கள் சாலை மறியல்

சென்னை: கண்ணகி நகரில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த ஒப்பந்த பணியாளர் வரலட்சுமி(30). இவர் சனிக்கிழமை (ஆக.2... மேலும் பார்க்க

விஜய் தராதரம் அவ்வளவுதான்: அமைச்சர் கே.என். நேரு பதிலடி!

திருச்சி: நேற்று அரசியலுக்கு வந்த விஜய், ஒரு மாநிலத்தின் முதல்வரை, மாபெரும் இயக்கத்தின் தலைவரை, நாற்பது ஆண்டுகளுக்கு மேல் பொது வாழ்வில் ஈடுபட்டு வருபவரை நாகரிகமன்றி பேசியிருப்பது அவமரியாதைக்குரியது, இ... மேலும் பார்க்க