ஹாரி கேன் ஹாட்ரிக்: அபார வெற்றியுடன் (6-0) சீசனை தொடங்கிய பயர்ன் மியூனிக்!
சீனா - பிரேசில் இணைந்து அமெரிக்காவுக்கு செம்மட்டி அடி! கதறும் டிரம்ப்!!
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதல், உலக நாடுகளை வரி விதிப்பு என்ற வார்த்தை மூலம் அதிகாரம் செய்து வரும் டொனால்ட் டிரம்புக்கு சம்மட்டி அடியாக விழுந்துள்ளது சீனா - பிரேசிலின் அடுத்த நகர்வு.
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதித்திருக்கிறது அமெரிக்கா. பிரிக்ஸ் அமைப்பில் மற்றொரு நாடான பிரேசிலும் 50 சதவீத வரி விதிப்பை எதிர்கொண்டுள்ளது.
தற்போது இந்தியாவுக்கு ரஷியாவும் சீனாவும் ஆதரவுக் கரம் நீட்டியிருக்கும் நிலையில், அமெரிக்காவுக்கு எதிராக சீனா - பிரேசில் இணைந்து நடத்திய நகர்வு அமெரிக்காவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. அதுதான் சோயாபீன்ஸ் ஏற்றுமதி.
உலகிலேயே அதிகளவில் சோயாபீன்ஸ் இறக்குமதி செய்யும் நாடுகளில் முதலிடத்தில் இருப்பது சீனா. அந்நாட்டுக்கு சோயாபீன்ஸ் அதிகளவில் ஏற்றுமதி செய்து வருவது அமெரிக்கா. ஆனால், அந்த நிலை தற்போது மாறி வருகிறது. அமெரிக்காவிடமிருந்து சோயாபீன்ஸ் இறக்குமதி செய்யாமல், அதிகளவில் உற்பத்தி செய்யும் இரண்டாவது நாடான பிரேசிலிடமிருந்து சீனா இறக்குமதி செய்து வருகிறது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதியை படிப்படியாகக் குறைத்து, வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபரில் வெகுவாகக் குறைத்துவிடும் நிலையில் உள்ளது சீனா.
வாஷிங்டனிலிருந்து, சோயாபீன்ஸ் இறக்குமதியை பிரசில்லாவுக்கு சீனா மாற்றியிருப்பது, அமெரிக்க வர்த்தகத்தின் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம், அமெரிக்காவின் சோயாபீன்ஸ் ஏற்றுமதி பாதிக்கப்படும். இதனால் அமெரிக்க விவசாயம் பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த ஜூலையில் அமெரிக்காவிடமிருந்து சீனா 420,873 டன் சோயாபீன்ஸ் இறக்குமதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது பல பில்லியன் மதிப்புள்ளதால், அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதி செய்வதை சீனா நிறுத்தினால், பல ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் நிலையில் அமெரிக்கா உள்ளது.