``ஹனுமான் வழிபாடு கிடையாது; ராவணன் எங்கள் முன்னோர்'' - மகாராஷ்டிராவில் உள்ள ஒரு ...
இந்திய வானில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடை நீட்டிப்பு!
இந்திய வான்வழியை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையானது செப்.24 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் ஆபரேஷன் சிந்தூர் எனும் ராணுவ நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்களின் மீது இந்தியா தாக்குதல் நடத்தி தகர்த்தது.
இதனைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையில் போர் தாக்குதல் தொடங்கியதுடன், இருநாடுகளும் தங்களது வான்வழியைகளை மூடின. மேலும், இருநாடுகளிலும் வசித்த இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் தங்களது தாயகங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
இத்துடன், இந்திய வான்வழியில் பாகிஸ்தானின் பயணிகள் மற்றும் போர் விமானங்கள் ஆகியவை நுழைவதற்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்தத் தடையானது, கடந்த மே மாதம் அமல்படுத்தப்பட்டதுடன், தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்திய வான்வழியை பாகிஸ்தான் விமானங்கள் பறக்கக்கூடாது எனவும், இந்தத் தடையானது வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும், நேற்று (ஆக.22) அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பாகிஸ்தான் வான்வழியில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்டுள்ள தடையும் செப்.24 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 40% முதல்வர்கள் மீது குற்ற வழக்குகள்! முதலிடத்தில் இருப்பவர் யார்?