செய்திகள் :

ஆஸி. பந்துவீச்சைப் பார்த்து கற்றுக்கொண்டேன்: லுங்கி இங்கிடி

post image

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற லுங்கி இங்கிடி, “ஆஸி. பந்துவீச்சாளர்களைப் பார்த்து கற்றுக்கொண்டேன்” எனக் கூறியுள்ளார்.

2-0 என தெ.ஆ. தொடரை வென்றது. இரண்டாவது போட்டியில் 42 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்த லுங்கி இங்கிடி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

84 ரன்கள் வித்தியாசத்தில் தெ.ஆ. வென்றது. செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்து இங்கிடி பேசியதாவது:

இரண்டாவதாக பந்துவீசுவதில் ஒர் அழகான விஷயம் இருக்கிறது. எந்த மாதிரி பந்துவீசினால் உபயோகமாக இருக்கும் என நாம் உட்கார்ந்து பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

நாதன் எல்லீஸின் திட்டங்களைப் பார்த்தேன். அவர் அதில் மிகவும் வெற்றிகரமாகவே இருந்தார். அதனால், அது எனக்கு சில திட்டங்களை அளித்தது.

சேவியர் பார்ட்லெட் புதிய பந்தில் ஸ்விங்கும் வேகமாக நகர்வதையும் பார்க்க முடிந்தது.

இதிலிருந்து எது உபயோகமாகும் என்ற ’ப்ளூபிரிண்ட்’ நமக்கு கிடைக்கிறது. அதை அப்படியே களத்தில் செயல்படுத்த வேண்டியதுதான் என்றார்.

Lungi Ngidi says he loves defending with the ball in one-day internationals and that Australia's bowlers gave him a "blueprint" for success.

லபுஷேனை திட்டமிட்டு வீழ்த்தியது எப்படி? விளக்கிய தெ.ஆ. வீரர்!

மார்னஸ் லபுஷேனின் விக்கெட்டை திட்டமிட்டு வீழ்த்தியதாக தென்னாப்பிரிக்க வீரர் லுங்கி இங்கிடி தெரிவித்துள்ளார்.ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என தெ.ஆ. அணி வென்றுள்ளது. டி20 தொடரை 2-1 என ஆஸி. வென்ற நில... மேலும் பார்க்க

ஆசிய கோப்பை: லிட்டன் தாஸ் தலைமையில் வங்கதேச அணி! மூத்த வீரர்கள் புறக்கணிப்பு?

ஆசிய கோப்பைக்கான 16 நபர்கள் கொண்ட வங்கதேச அணி டி20 அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் வருகிற செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத... மேலும் பார்க்க

ஐசிசி மகளிா் உலகக் கோப்பை ஆட்டங்கள்: பெங்களூரில் இருந்து மும்பைக்கு மாற்றம்

பெங்களூரில் நடைபெறவிருந்த ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆட்டங்கள் மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளன. சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் சாா்பில் உலகக் கோப்பை மகளிா் ஒருநாள் கிரிக்கெட் போட்டி... மேலும் பார்க்க

நெகிடி 5 விக்கெட்டுகள்: தொடரை வென்றது தெ.ஆ.!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக பந்துவீசிய லுங்கி நெகிடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டி20 தொடரை 2-1 என ஆஸ... மேலும் பார்க்க

1 ரன்னில் மீண்டும் ஆட்டமிழந்த லபுஷேன்..! ஸ்மித் இல்லாமல் தடுமாறும் ஆஸி.!

ஸ்டீவ் ஸ்மித், மேக்ஸ்வெல் ஓய்வுக்குப் பிறகு ஆஸி. அணி ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக சொதப்பி வருகிறது. குறிப்பாக குட்டி ஸ்டீவ் ஸ்மித் எனப்படும் மார்னஸ் லபுஷேன் தனது மோசமான ஃபார்மிலே இன்னும் தொடர்வது ... மேலும் பார்க்க

சதத்தை தவறவிட்ட 2 தெ.ஆ. வீரர்கள்: ஆஸி. வெற்றிபெற 278 ரன்கள் இலக்கு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 49.1 ஓவர்களில் 277 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டி20 தொடரை 2-1 என ஆஸி. வென்ற நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்... மேலும் பார்க்க