மும்பை: ரயில் குப்பை தொட்டியில் 6 வயது குழந்தையின் பிணம்; விசாரணையில் பகிர் தகவல...
தவெக தொண்டர்கள் மறைவுக்கு விஜய் இரங்கல்!
தவெக மாநாட்டின்போது உயிரிழந்த தொண்டர்களுக்கு கட்சித் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, பாரபத்தியில் வியாழக்கிழமை(ஆக. 21) மாலை நடைபெற்றது.
தவெக மாநாடு நடைபெறும் திடலில் அன்று காலை முதலே ஏராளமான தொண்டர்கள் குவியத் தொடங்கினர். கொளுத்தும் வெயில் சவாலாக இருந்தபோதும் லட்சக்கணக்கான மக்கள் கூடியதால் மாநாடு ஒரு மணி நேரம் முன்னதாகவே தொடங்கியது.
மாநாட்டில் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் மாநாட்டுக்கு வந்த தொண்டர்கள் சிலர் உயிரிழந்தனர். அவர்களுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"நம் மீது தீராப் பற்று கொண்ட கழகத் தோழர்கள் செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் பகுதிக் கழக நிர்வாகி R.பிரபாகரன், நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கேம்ப் லைன் K.ரித்திக் ரோஷன், விருதுநகர் மாவட்டம், இனாம் கரிசல்குளம் கிளைக் கழக நிர்வாகி K. காளிராஜ் ஆகியோர் மதுரையில் நடைபெற்ற மாநாட்டிற்கு முன்பும் பின்பும் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
நம் கழகத்திற்கான இவர்களது பற்றுறுதியும் பங்களிப்பும் என்றென்றும் நம் நினைவில் நிற்கும். அவர்கள் விரும்பிய இலட்சிய சமுதாயத்தை நாம் படைத்துக் காட்டுவோம். கழகத் தோழர்களைப் பிரிந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
காலமான கழகத் தோழர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். அவர்களின் குடும்பங்களுக்கு நம் கழகம் உறுதுணையாக இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
நம் மீது தீராப் பற்று கொண்ட கழகத் தோழர்கள் செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் பகுதிக் கழக நிர்வாகி திரு. R.பிரபாகரன், நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கேம்ப் லைன் திரு. K.ரித்திக் ரோஷன், விருதுநகர் மாவட்டம், இனாம் கரிசல்குளம் கிளைக் கழக நிர்வாகி திரு. K. காளிராஜ் ஆகியோர் மதுரையில்…
— TVK Vijay (@TVKVijayHQ) August 23, 2025