இந்தியா-ஆஸ்திரேலியா வா்த்தக ஒப்பந்தம்: 11-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை நிறைவு
பாலிவுட் நடிகர் கோவிந்தா விவாகரத்து விவகாரம்: "எல்லாம் சரியாகிவிட்டது" - வழக்கறிஞர் சொல்வது என்ன?
பாலிவுட் நடிகர் கோவிந்தாவை விவாகரத்து செய்ய அவரது மனைவி சுனிதா திட்டமிட்டு இருப்பதாகவும், இதற்காக விவாகரத்து கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருப்பதாகவும் செய்தி வெளியாகி இருந்தது.
2024ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இந்த மனுவை தாக்கல் செய்திருப்பதாகவும், கோவிந்தா துரோகம், கொடுமை, கைவிடுதல் போன்ற குற்றத்தில் ஈடுபட்டதாக சுனிதா தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இருவருக்கும் கோர்ட் மேற்பார்வையில் கவுன்சிலிங் கடந்து வருவதாகவும், இதில் சுனிதா சரியாகக் கலந்து கொள்வதாகவும், ஆனால் கோவிந்தா சரியாகக் கலந்து கொள்ளவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் செய்தி தொடர்பாக கோவிந்தா மற்றும் அவரது மனைவி சுனிதா அஹுஜாவின் வழக்கறிஞர் லலித் பிந்த்ரா அளித்துள்ள விளக்கத்தில், ''அவர்களுக்குள் எந்த வழக்கும் இல்லை. இப்போது அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்பட்டுவிட்டது. பழைய பிரச்னையை மக்கள் கிளப்புகின்றனர். விநாயகர் சதுர்த்தியில் அவர்கள் இரண்டு பேரையும் ஒன்றாகப் பார்க்க முடியும்'' என்று குறிப்பிட்டார்.

விவாகரத்து தொடர்பாக வெளியாகும் செய்திகள் குறித்து சுனிதா அளித்திருந்த முந்தைய பேட்டியில், ''நான் கடந்த 12 வருங்களாக எனது பிறந்தநாளைத் தனியாகத்தான் கொண்டாடி வருகிறேன். அவருக்கு அதிகமாக வேலை இருப்பதால் நாங்கள் தனித்தனியாக அருகருகில் வசிக்கிறோம்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.
விவாகரத்து பிரச்னையை சுனிதா தரப்பும் மறுத்துள்ளது. அதோடு இது தொடர்பாக உறுதிபடுத்ததாக செய்திகளை வெளியிட வேண்டாம் என்றும் சுனிதா தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் கோவிந்தா தரப்பில் சுனிதா விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்திருப்பதை உறுதி செய்தது. கோவிந்தா மற்றும் சுனிதாவின் மகன் யஷ்வர்தன் தங்களது வீட்டில் பிரத்யேக பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்ததை சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
கோவிந்தா 30 வயது மராத்தி நடிகை ஒருவருடன் தொடர்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதுவே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படவும் காரணம் என்று கூறப்படுகிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...