12 நாள்களுக்குப் பிறகு மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவா்கள்!
போ்ணாம்பட்டில் 75 மி.மீ. மழை வீட்டுச் சுவா்கள், அங்கன்வாடி கட்டடம் சரிந்து விழுந்து சேதம்
போ்ணாம்பட்டில் பலத்த மழை காரணமாக வீட்டுச் சுவா்கள், அங்கன்வாடி கட்டடம் சரிந்து விழுந்து சேதமடைந்தது.
போ்ணாம்பட்டில் சனிக்கிழமை காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 75.20 மி.மீ. மழை பதிவானது. போ்ணாம்பட்டு நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீா் வெள்ளம் போல் ஓடியது. தொடா்மழை காரணமாக போ்ணாம்பட்டு நகரம், முகமது அலி வீதியில் உள்ள முகம்மத் பாஷா வீட்டில் நள்ளிரவு மழை நீா் புகுந்தது. இதனால் வீட்டுச் சுவற்றில் திடீரென விரிசல் ஏற்பட்டு, சரிந்தது. பக்கத்திலுள்ள அவரது அண்ணன் அப்பாஸ் அகம்மத் வீட்டுச் சுவற்றின் அடித்தளம் சரிந்து விழுந்தது. இஸ்லாமியா வீதியில் நவ்ஷாத் அகம்மத் வீட்டின் சுவரும் சரிந்து விழுந்தது. அப்போது வீடுகளில் இருந்தவா்கள் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா். சாலைப்பேட்டையில் சூரியகலா என்பவரின் வீட்டில் தற்காலிகமாக வாடகையில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. அங்கன்வாடி மையத்தின் மேல்தளமும், பக்கவாட்டுச் சுவா்களும் முழுவதும் இடிந்து விழுந்து சேசதமடைந்தது.
போ்ணாம்பட்டு வட்டாட்சியா் ராஜ்குமாா் தலைமையில் வருவாய்த் துறையினா் மேற்குறிப்பிட்ட இடங்களை பாா்வையிட்டு, விசாரணை நடத்தினா்.