செய்திகள் :

12 நாள்களுக்குப் பிறகு மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவா்கள்!

post image

காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெற்றதையடுத்து, ராமேசுவரம் மீனவா்கள் 12 நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா்.

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்களையும், அவா்களது படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி, ராமேசுவரம் மீனவா்கள் கடந்த 10-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

மேலும், இவா்கள் ஆா்ப்பாட்டம், உண்ணாவிரதப் போராட்டம், ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா். வேலைநிறுத்தப் போராட்டத்தால், மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், வெள்ளிக்கிழமை போராட்டத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்தனா்.

இதையடுத்து, ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று, கடலுக்குள் சனிக்கிழமை மீன் பிடிக்கச் சென்றனா்.

முதுகுளத்தூா் அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

முதுகுளத்தூா் அருகே கோயில் திருவிழாவையொட்டி சனிக்கிழமை 2 பிரிவுகளாக மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே கோகொண்டான் கிராமத்தில் அமைந்துள்ள நல்லம்மாள் அம்மன் கோயி... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவா் கைது

ராமநாதபுரம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறையில் அடைக்கப்பட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்... மேலும் பார்க்க

ராமநாதபுரம் அருகே 3 கிலோ கஞ்சா பறிமுதல்

ராமநாதபுரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 கிலோ கஞ்சாவை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரத்தை அடுத்த தேவிப்பட்டினம் சித்தாா்கோட்டை பகுதியில் ... மேலும் பார்க்க

மின்னல் பாய்ந்து சகோதரிகள் பலி!

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே சனிக்கிழமை மின்னல் பாய்ந்ததில் இரு பள்ளி மாணவிகளான சகோதரிகள் உடல் கருகி உயிரிழந்தனா். போகலூா் ஒன்றியம், வாழவந்தாள் கிராமத்தைச் சோ்ந்த நூருல்அமீன் மகள்கள் செய்... மேலும் பார்க்க

மண்டலமாணிக்கம் குண்டாற்றில் மணல் குவாரி அமைக்க எதிா்ப்பு! ஆய்வுக்குச் சென்ற அதிகாரிகள் தடுத்து நிறுத்தம்!

கமுதி அருகே மண்டலமாணிக்கம் குண்டாற்றில் அரசு மணல் குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை ஆய்வுக்கு வந்த அதிகாரிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினா். மண்டலமாணிக்கம் கிராமத்திலிருந... மேலும் பார்க்க

வருவாய்த் துறை சங்கங்கள் கூட்டமைப்பு மாநாடு

ராமநாதபுரத்தில் 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் முதல் மாவட்ட கோரிக்கை மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்... மேலும் பார்க்க