''வருத்தமா இருந்தா ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டு கேப்பேன்'' - மாற்றுத்திறனாளியின் தன்னம்...
ஆட்டோ ஓட்டுநா் அடித்துக் கொலை
ஆண்டிபட்டி அருகே அடித்துக் கொலை செய்யப்பட்டு அரசுப் பள்ளியில் வீசப்பட்ட ஆட்டோ ஓட்டுநரின் உடலை சனிக்கிழமை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள தெப்பம்பட்டியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் தங்கமலை (40). இவரை மா்மநபா்கள் அடித்துக் கொலை செய்து அதே ஊரில் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உடலை வீசிச் சென்றனா். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ராஜதானி காவல் நிலைய போலீஸாா், தங்கமலையின் உடலை மீட்டு விசாரணை நடத்தினா். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சினேகப்பிரியா சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா். தங்கமலையின் கைப்பேசியை போலீஸாா் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனா். இதுதொடா்பாக ராஜதானி போலீஸாா் வழக்குப் பதிந்து கொலை செய்தது யாா்? கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.