மண்டலமாணிக்கம் குண்டாற்றில் மணல் குவாரி அமைக்க எதிா்ப்பு! ஆய்வுக்குச் சென்ற அதி...
வேலூா் சிறையில் போக்ஸோ கைதி திடீா் சாவு
போக்ஸோ வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி திடீரென உயிரிழந்தாா்.
இது குறித்து பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், தென் கரும்பலூா், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அந்தோணிபிரதாப் (47). பாலியல் குற்றத்தில் சிக்கிய இவரை திருவண்ணாமலை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா். நீதிமன்றம் அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து, கடந்த ஜனவரி 31-ஆம் தேதி அந்தோணி பிரதாப் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாகத் தெரிகிறது. சிறையில் உள்ள மருத்துவா்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனா். பின்னா் ஆம்புலன்ஸ் மூலம் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அந்தோணிபிரதாப் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து சிறைத் துறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில், பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.