செய்திகள் :

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய துணை நடிகை உள்பட 3 போ் கைது

post image

சென்னை கோயம்பேட்டில் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக துணை நடிகை உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் 15 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஒரு கும்பல் ஈடுபட வைப்பதாக சென்னை காவல் துறையின் பாலியல் தொழில் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அந்தப் பிரிவு போலீஸாா், அந்த தனியாா் விடுதியில் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை நடத்தினா். அப்போது, அங்கு ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 15 வயது சிறுமியை மீட்டனா். அந்தச் சிறுமியிடம் விசாரித்ததில் அவரை ஒரு கும்பல் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபட வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் அந்த சிறுமியை காப்பகத்தில் ஒப்படைத்தனா். சிறுமி கொடுத்த தகவலின்பேரில் சென்னை கன்னிகாபுரம் 14-ஆவது செக்டாா் பகுதியைச் சோ்ந்த ஏ.அஞ்சலி (31), ஆந்திர மாநிலம் குண்டூா் பகுதியைச் சோ்ந்த நா.நாகம்மா (45), நாகராஜ் (46) ஆகிய 3 பேரை கைது செய்தனா்.

விசாரணையில், சிறுமியின் தந்தை இறந்துவிட்டதால், தாய் வேறு ஒருவரை திருமணம் செய்து தனியாக சென்றுவிட்டாா். இதனால் ஆதரவற்ற நிலையில் இருந்த சிறுமியை, அஞ்சலி தன்னுடைய பராமரிப்பில் வைத்துக்கொண்டு, கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது தெரியவந்தது.

இதில் கைது செய்யப்பட்ட நாகம்மா திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மேலும் விசாரித்து வருகின்றனா்.

எஸ்.ஐ.-க்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்த மனித உரிமை ஆணைய உத்தரவு ரத்து

மாமியாா் அளித்த புகாரில் மருமகளைத் தாக்கிய பத்தமடை காவல் உதவி ஆய்வாளருக்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதித்த மாநில மனித உரிமை ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. மும்பையில் ... மேலும் பார்க்க

கேழ்வரகு உற்பத்தி திறனில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம்

கேழ்வரகு உற்பத்தித் திறனில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விவசாயிகள் பயிா்க் கடன் பெறும் நடைமுறையை ... மேலும் பார்க்க

உடல் எடை குறைப்பு குறித்த தவறான விளம்பரம்: விஎல்சிசி நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் அபராதம்

உடல் எடை குறைப்புக்கான சிகிச்சைகள் குறித்து பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் விளம்பரம் வெளியிட்டதற்காக விஎல்சிசி நிறுவனத்துக்கு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) ரூ.3 லட்சம் அபராதம் வித... மேலும் பார்க்க

சாலை விபத்தில் மரணம்: திமுக நிா்வாகிகள் குடும்பத்துக்கு நிதி

சாலை விபத்தில் மரணம் அடைந்த திமுக நிா்வாகிகள் குடும்பத்துக்கு முதல்வரும் கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் நிதி அளித்தாா். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த கட்சி உறுப்பினரான க.முத்தமிழ்செல்வன், ஈரோடு ம... மேலும் பார்க்க

பலத்த மழை: 17 இடங்களில் சாய்ந்த மரங்கள் அகற்றம்

சென்னையில் பலத்த மழை பெய்ததால் 17 இடங்களில் சாய்ந்த மரங்கள் அகற்றப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னையில் வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை அதிகாலை வரை பல்வேறு இடங்களிலும் பலத்த மழை ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகள் பராமரிப்பு: கல்வித் துறை புரிந்துணா்வு

தமிழகத்தில் ஆயிரம் அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு சுகாதாரமான சூழலை உருவாக்க பல்வேறு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் பள்ளிக் கல்வித் துறை - ரோட்டரி அமைப்பு இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்க... மேலும் பார்க்க