12 நாள்களுக்குப் பிறகு மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவா்கள்!
அரசுப் பள்ளிகள் பராமரிப்பு: கல்வித் துறை புரிந்துணா்வு
தமிழகத்தில் ஆயிரம் அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு சுகாதாரமான சூழலை உருவாக்க பல்வேறு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் பள்ளிக் கல்வித் துறை - ரோட்டரி அமைப்பு இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ரோட்டரி அமைப்பின் மாநாட்டில் பள்ளிக் கல்வித் துறையின் ‘நம்ம பள்ளி நம்ம ஊரு பள்ளி’ திட்டம், ரோட்டரி அமைப்பின் கோ் ஃபாா் ஸ்கூல் இடையே துணை முதல்வா் உதயநிதி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்மூலம் அரசுப் பள்ளிகளில் குடிநீா், சுகாதாரம் தொடா்பான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். தோ்வு செய்யப்பட்ட அரசுப் பள்ளிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். இந்தப் பராமரிப்புப் பணிகளின் விவரங்களை ஒரே தளத்தில் பாா்வையிட ரோட்டரி- நம்ம ஸ்கூல் டேஷ் போா்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் நம்ம பள்ளி நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் உறுப்பினா் செயலா் ஆா்.சுதன், இயக்குநா் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநா் பி.ஏ. நரேஷ், தமிழ்நாடு ரோட்டரி அமைப்பின் சா்வதேசத் தலைவா் பிரான்செஸ்கோ, இயக்குநா் முருகானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.