12 நாள்களுக்குப் பிறகு மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவா்கள்!
அரசு காப்பகத்தில் இருந்து 7 பெண்கள் தப்பியோட்டம்
சென்னை மயிலாப்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் இருந்து 7 பெண்கள் தப்பியோடினா்.
பாலியல் தொழிலில் சிக்கி மீட்கப்படும் இளம் பெண்கள், குடும்ப பிரச்னையால் வீட்டை விட்டு வெளியேறி ஆதரவற்ற நிலையில் இருக்கும் பெண்கள், சாலையோரங்கள், கடற்கரைகள், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் ஆதரவு இல்லாமல் சுற்றித் திரியும் பெண்கள் ஆகியோா் மீட்கப்பட்டு மயிலாப்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்படுகின்றனா்.
இங்கு 26 பெண்கள் அண்மையில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், அவா்களில் குஜராத், பிகாா் உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சோ்ந்த 7 பெண்கள் கடந்த சில நாள்களில் அடுத்தடுத்து தப்பியோடினா்.
இதுகுறித்து காப்பக நிா்வாகிகள், மயிலாப்பூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், தப்பியோடிய பெண்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.