வங்கதேசத்தில் ஒரே நாளில் டெங்குவுக்கு 5 பேர் பலி! புதியதாக 311 பாதிப்புகள் உறுதி...
Akshay Kumar: "6.30 மணிக்கு இரவு உணவு; வாரத்தில் ஒரு நாள் விரதம்" - அக்ஷய் குமாரின் இளமை ரகசியம்
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், தான் மிகவும் இளமையுடன் இருப்பதற்கான ரகசியம் குறித்துப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அக்ஷய் குமார், ''எனது வாழ்க்கை மிகவும் எளிமையானது. மிகவும் கட்டுப்பாடான வாழ்க்கைதான் என்னை இந்த அளவுக்கு ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. திங்கள்கிழமை முழுமையான சாப்பாட்டுக்கு விடுதலை கொடுத்துவிடுவேன்.
ஞாயிற்றுக்கிழமை இரவு சாப்பிட்டு விட்டு அடுத்து செவ்வாய்கிழமை காலையில்தான் சாப்பிடுவேன். மாலை நேரத்தில் எப்போதும் 6.30 மணிக்கே சாப்பிட்டுவிடுவேன்.

வயிற்றைச் சுகாதாரமாக வைத்துக்கொள்வதன் மூலம் அனைத்து சுகாதார பிரச்னைகளையும் தவிர்க்க முடியும். எடை தூக்கும் பயிற்சியிலும் ஈடுபடமாட்டேன். உடல் எடை குறைப்பு தொடர்பான உடற்பயிற்சி, மலையேறுதல் போன்றவற்றில் ஆர்வம் காட்டுவேன்.
இரவு உணவைச் சீக்கிரமே சாப்பிடுவது உங்களது உடலுக்கு மிகவும் முக்கியம். ஏனென்றால் நாம் உறங்கச் செல்லும்போது நமது கண், கால் உட்பட உடம்பின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும். ஆனால் நாம் தாமதமாகச் சாப்பிட்டால் வயிறு ஓய்வு எடுக்கப் போதிய நேரம் கிடைக்காது.
நீங்கள் உறக்கத்திலிருந்து எழும்போதுதான் வயிறு ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும். ஆனால் நீங்கள் காலையில் எழுந்தவுடன் காலை உணவைச் சாப்பிட்டுவிடுவீர்கள். இதனால் வயிறு மீண்டும் வேலை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறது.
வயிறு கடினமாக உழைக்கிறது. வயிற்றிலிருந்துதான் அனைத்து நோய்களும் வருகிறது. எனவேதான் வயிற்றைச் சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறேன். நீங்கள் உங்களது வயிற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால் நோய் உங்களை நெருங்காது.
எனவேதான் நான் மாலை 6.30 மணிக்குச் சாப்பிடும் பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறேன். விரைவில் சாப்பிடுவதால் உங்களது வயிறு அவற்றை ஜீரணிக்க போதிய நேரம் கிடைக்கிறது. மாலை 6.30 மணிக்குச் சாப்பிட்டுவிட்டு இரவு 10 மணிக்கு நீங்கள் உறங்கச் செல்லும்போது உங்களது வயிறும் சாப்பாட்டை ஜீரணித்துவிட்டு ஓய்வு எடுக்கத் தயாராகிவிடும்'' என்று தெரிவித்தார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...