ஈரான்: ஆப்கன், பாக். எல்லையில் 5 காவல் அதிகாரிகள் சுட்டுக்கொலை!
தமிழில் பேச முடியவில்லையே என வருந்துகிறேன்: அமித் ஷா
நெல்லை: தமிழில் பேச முடியாததற்கு வருந்துகிறேன் என்று நெல்லையில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார்.
நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலையில் பிரமாண்டமாகத் தொடங்கியிருக்கிறது நெல்லை பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். இதில் பங்கேற்க உள்துறை அமைச்சர் புது தில்லியிலிருந்து நெல்லை வந்தார்.
பாஜக மாநில தலைவர் முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உரையாற்றிய நிலையில், நெல்லை பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் பங்கேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசி வருகிறார்.
அவர் பேசுகையில், மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். பாஜகவுக்காக பல தியாகங்கள் செய்தவர் இல. கணேசன்.
தமிழ் மண், தமிழக மக்கள், தமிழ் மொழி மீது அதீத பற்று கொண்டவர் பிரதமர் நரேந்திர மோடி. கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திரனுக்கு விழா எடுத்தவர் பிரதமர் மோடி. சோழர்களுக்கு பிரதமர் மோடி பெருமை சேர்த்துள்ளார் என்றும் கூறினார்.