செய்திகள் :

Pregnancy Robot: பெண்ணே வேண்டாம்; சீனாவின் குழந்தை பெற்றுக்கொடுக்கும் ரோபோட் - 2026-ல் வருகிறதா?

post image

இன்னும் சில ஆண்டுகளில் கர்ப்பமாகக் கூடிய மனித உருவ ரோபோக்களை அறிமுகப்படுத்த உள்ளது சீனா. உடலுறவு மூலம் அல்ல, குழந்தையை சுமக்கக்கூடிய செயற்கையான கருப்பையைக் கொண்டிருப்பதன் மூலம்.

சீனாவின் குவாங்சோ நகரில் உள்ள கைவா டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம்தான் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்தைத் தலைமை தாங்கும் டாக்டர் ஜாங் கிஃபெங், பெய்ஜிங் ரோபோட் மாநாட்டில், இதனை சாத்தியப்படுத்தும் அறிவியல் தொழில்நுட்பம் ஏற்கெனவே உள்ளதாகக் கூறியுள்ளார்.

கர்ப்பம்

கருப்பையை ஒரு ரோபோவின் வயிற்றில் வைப்பது மட்டுமே பாக்கி என்றும் கூறியிருக்கிறார். இந்த தொழில்நுட்பத்தால் வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்வது மாறும் என்கின்றனர்.

Pregnancy Robot எப்படி செயல்படும்?

ரோபோவின் வயிற்றுக்குள் வைக்கப்படவுள்ள இயந்திரம் முழுக்க முழுக்க உண்மையான கருப்பையை நகல் எடுத்து செயல்படுவதுபோல செயற்கையாக உருவாக்கப்படும்.

இதில் செயற்கை அம்னோடிக் திரவம் நிரப்பப்பட்டிருக்கும் மற்றும் ஒரு குழாய் தொப்புள் கொடியாகச் செயல்பட்டு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனை வழங்கும்.

இதற்கு முன்னர் 2017ம் ஆண்டு, அமெரிக்க விஞ்ஞானிகள் குறை பிரசவத்தில் பிறந்த ஆட்டுக்குட்டிகளை இதேப்போல உயிரி-பைகள் என்ற அமைப்பை உருவாக்கி அதில் அதிக நாட்கள் உயிருடன் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Future Pregnancy Hospitals
Future Pregnancy Hospitals

இப்போது டாக்டர் ஜாங் கிஃபெங்கின் குழுவினர் கருவையே ரோபோவில் வைத்து வளர்க்க முயற்சிக்கின்றனர். 10 மாதங்களும் குழந்தையை ரோபோ சுமக்கும். வாடகைத் தாய் முறையில் குழந்தைப் பெற்றுக்கொள்வதை விட இந்தமுறையில் செலவு குறைவு என்கின்றனர். தற்போதைய தகவல்களின்படி, 1,00,000 யுவான் இந்தியா மதிப்பில், சுமார் 12 லட்சம் செலவாகலாம்!

இந்த கண்டுபிடிப்புக்கான தேவை என்ன?

சீனாவில் மனிதர்களிடையே கருவுறாமை அதிகரித்து வருகிறது. 2007ம் ஆண்டு சுமார் 12% தம்பதிகள் கருவுறாமல் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. 2018ல் இது 18% ஆக அதிகரித்துள்ளது.

பலருக்கும் செயற்கை கருவுறுதல், ஐ.வி.எஃப் முயற்சிகள் பலனளிக்காமல் போயிருக்கின்றன. இத்தகைய குடும்பங்களுக்கு பலனளிக்கலாம் என்பதனால் இந்த தொழில்நுட்பத்துக்கு வரவேற்பு உள்ளது. அதேபோல சிலர் எதிர்க்கவும் செய்கின்றனர்.

Baby
Baby

சிலர் எதிர்ப்பது ஏன்?

கருவை சுமக்க இயந்திரங்களை நாடுவது குழந்தைக்கும் தாய்க்குமான பிணைப்பை பாதிக்கும் என்றும் சமூகம் பெற்றோரை பார்த்த விதத்தை மாற்றும் என்றும் கூறுகின்றனர்.

பெண்ணிய சிந்தனையாளர் ஆண்ட்ரியா டுவொர்கின் ஒருமுறை செயற்கை கருப்பைகள் "பெண்களின் முடிவை" குறிக்கும் என்று கூறியதைக் குறிப்பிடுகின்றனர்.

இந்த விவகாரத்தில் கைவா டெக்னாலஜிஸ் நிறுவனத்திடம், "பெற்றோராக யார் கருதப்படுகிறார்கள்? ரோபோவால் பிறந்த குழந்தைக்கு என்ன உரிமைகள் உள்ளன? கருமுட்டை யாரிடம் இருந்து பெறப்படும்? முட்டைகள், விந்து அல்லது கருப்பை இயந்திரங்களின் கறுப்புச் சந்தையை எவ்வாறு நிறுத்துவது?" போன்ற சட்டப்பூர்வ கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

மனிதர்களின் சட்டங்களையும் இயற்கையின் விதிகளையும் மீறி வேகமாக வளருகிறது அறிவியல். இந்த தொழில்நுட்பம் குழந்தை பிறப்பை பண்டமாக்குவதாகவும், மனித பிணைப்பின் முக்கியத்துவத்தை மங்கச் செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது பரவலாக்கப்பட்டால் கர்ப்பம் என்பது இயற்கையான வாழ்வியல் நிகழ்வாக அல்லாமல் சமாளிக்க வேண்டிய நோயைப் போல பார்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என மருத்துவத்துறையினர் எச்சரிக்கின்றனர். மறுபுறம் 2026க்குள் முதல் குழந்தை ரோபோவிடமிருந்து பிறப்பதை காண ஆவலாக தயாராகி வருகிறது தொழில்நுட்ப உலகம்!

Hike செயலி ஏன் தோல்வியடைந்தது? நிறுவனர் வெளியிட்ட முக்கிய தகவல்

இந்தியாவில் பிரபலமாக இருந்த ஹைக் (Hike) செயலி ஏன் மூடப்பட்டது என்பது குறித்து அதன் நிறுவனர் கவல் கூக் மனம் திறந்து பேசியிருக்கிறார். வாட்ஸ்அப்பிற்கு மாற்றாக இந்திய இளைஞர்களிடையே பெரும் புகழ் பெற்றிருந... மேலும் பார்க்க

Aravind Srinivas: 'Google Chrome'-யை விலை பேசும் தமிழ் பையன்; யார் இந்த அரவிந்த் ஶ்ரீனிவாஸ்?

இணையதள தேடுதலில் 'Mozilla Firefox, Microsoft Edge, Safari' எனப் பல 'Browser'கள் இருந்தாலும் பல ஆண்டுகளாக 3 பில்லயன் பயன்பாட்டாளர்களைக் கொண்டு முன்னணியில் கோலோச்சி வருகிறது கூகுள் குரோம் (Google Chrome... மேலும் பார்க்க

Open AI: பணியாளர்களுக்கு பெரிய அளவிலான வைப்பு போனஸ்; கவனம் பெறும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் முடிவு!

ஓபன்ஏஐ நிறுவனம், தனது மூன்றில் ஒரு பங்கை பணியாளர்களுக்கு பெரிய அளவிலான வைப்பு போனஸாக வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தி வெர்ஜ் அறிக்கையின்படி, ஓபன்ஏஐ தனது தேவைப்படும் ஊழியர்களுக்கு "சிறப்பு ஒரு ... மேலும் பார்க்க

Matt Deitke: 24 வயது AI ஆய்வாளர்: நேரில் சென்று பேசிய மார்க்; ரூ.2,000 கோடி சம்பளம் - யார் இவர்?

ஏ.ஐ என்ற வார்த்தை, கொஞ்சம் கொஞ்சமாக உலகை ஆள தொடங்கியிருக்கிறது. இப்போது நிறுவனங்களும் ஏ.ஐ நிபுணர்கள், ஏ.ஐ ஆய்வாளர்களை வேலைக்கு எடுக்க தொடங்கியிருக்கிறது. அதனால், ஏ.ஐ தெரிந்திருப்பர்வகளுக்கு இப்போது தன... மேலும் பார்க்க

AI வேலைகளுக்குக் கோடிகளில் அள்ளித்தரும் ஆப்பிள் நிறுவனம்; என்னனென்ன வேலை, எவ்வளவு சம்பளம் தெரியுமா?

மெட்டா, ஆப்பிள் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆயிரக்கணக்கானோரை வேலையிருந்து தூக்கிவிட்டு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த (AI) துறைகளில் அதிமானவர்களை பணியமர்த்துவதில் தீவிரம் காட்டி... மேலும் பார்க்க

உலகின் முதல் ஏஐ மசாஜ் சேவையை அறிமுகப்படுத்திய நிறுவனம்: மனித வேலைகளுக்கு சவாலா?

கடந்த இரண்டு ஆண்டுகளில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், மனிதர்களின் வேலைவாய்ப்புகள் குறைவதற்கான அபாயம் அதிகரித்துள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அ... மேலும் பார்க்க