செய்திகள் :

நீலகிரி: பழங்குடி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; தலைமறைவிலிருந்த ஆசிரியர் கைது; பின்னணி என்ன?

post image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி வரும் மாரியப்பன் என்பவர் 11 மற்றும் 12 - ம் வகுப்பு மாணவிகளுக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறைக்கு அண்மையில் புகார் அழைப்பு வந்திருக்கிறது.

ரகசியமாக பள்ளிக்குச் சென்ற பெண்கள் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் மாணவிகளிடம் அழைத்து ரகசியமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Child Abuse
Child Abuse

ஆங்கில பாடம் நடத்தி வந்த ஆசிரியர் மாரியப்பன் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக 6 பழங்குடி மாணவிகள் மற்றும் ஒரு பட்டியல் சமுதாயத்தை மாணவி ஒருவர் என 7 பேர் புகார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக காவல்துறையினர் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், ஆசிரியர் மாரியப்பன் திடீரென தலைமறைவானார்.

காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் தேடிவந்தனர். தென்காசி பகுதியில் தலைமறைவாக இருந்த அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதன் பின்னணி குறித்துத் தெரிவித்த காவல்துறையினர், "ஆசிரியர் மாரியப்பன் பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் நிரந்தர ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அவரின் மனைவியும் அரசுப் பள்ளியில் நிரந்தர ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளிடம் நட்பு பாராட்டுவதைப் போன்று பழகி பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

கைதான மாரியப்பன்
கைதான மாரியப்பன்

மாணவிகள் கண்டித்தும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அதே அத்துமீறலில் ஈடுபட்டு வந்திருக்கிறார். புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் பணியாற்றிய பள்ளி ஒன்றிலும் இதுபோன்ற அத்துமீறலில் ஈடுபட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அது குறித்தும் விசாரணை நடத்தப்படும்" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

தந்தை, சித்தியை தலைதுண்டித்து கொன்ற மகன்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்; சேலத்தில் பரபரப்பு!

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்துள்ள பூசாரிகாடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (47). கூழித்தொழில் செய்து வந்தார். இவருக்கு ஆகாஷ் (23) என்ற மகன் உள்ளார். ஆகாஷ் கறிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்... மேலும் பார்க்க

சென்னை: தோழிக்காக சிறைக்குச் சென்ற ஆண் நண்பர் - ஊழியருக்கு ஆபாச பதிவு அனுப்பிய பின்னணி!

சென்னை மதுரவாயல் சிவந்தி ஆதித்தனார் தெருவில் வசித்து வரும் பிரபு (41). இவர், சென்னை, அரும்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த அலுவலகத்தின் பெயரில் போலியாக ஒரு இ... மேலும் பார்க்க

வங்க மொழியில் பேசிய கொல்கத்தா மாணவர்கள்; `பங்களாதேஷ் பிரஜைகள்' எனக் கூறி தாக்கிய வியாபாரிகள்!

சமீப காலமாக பங்களாதேஷ் பிரஜைகளுக்கு எதிராக சில மாநிலங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மும்பை போன்ற நகரங்களில் திடீரென ரெய்டு நடத்தி பங்களாதேஷ் பிரஜைகளை கைது செய்து நாடு கடத்தும் சம்பவங்களும் ந... மேலும் பார்க்க

உத்தரகாண்ட்: ஹோம்வெர்க் செய்யாததால் அடித்த ஆசிரியர்; கோவத்தில் துப்பாக்கியால் சுட்ட மாணவன்

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள காசிப்பூர் என்ற இடத்தில் 9வது வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் தன்னை வகுப்பறையில் அடித்த ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டுள்ளான். அங்குள்ள குருநானக் பள்ளியில் அந்த மாணவன் 9வது... மேலும் பார்க்க

NIA RAID: திண்டுக்கல்லில் 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை; ஒருவர் கைது - என்ன காரணம்?

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் பாமகவை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு முக்கிய காரணமாக மதமாற்றம் செய்வதை ராமலிங்கம... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை - வடமாநில இளைஞரின் வக்கிரச் செயல்!

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி அந்தப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவி, தனியாக பள்ளிக்கு நடந்துச் சென்றார். அப்போது வடமாநில ... மேலும் பார்க்க