சென்னையில் கனமழை
சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
வளசரவாக்கம், மதுரவாயல், வானகரம், போரூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்கிறது. ஆவடி, பூவிருந்தவல்லி, செம்பரம்பாக்கம், காட்டுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்குகிறது.
வெள்ளிக்கிழமை மாலையில் மழை வெளுத்து வாங்குவதால் பணிந்து முடிந்து வீடுகளுக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
மேலும் மழை நீர் ஆங்காங்கே சாலைகளில் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மெதுவாக தங்களது வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.