Madras Day: ராணி மேரி கல்லூரியில் சென்னை தின நிகழ்ச்சி; சென்னை சார்ந்த ஓவியக் கண...
தந்தை, சித்தியை தலைதுண்டித்து கொன்ற மகன்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்; சேலத்தில் பரபரப்பு!
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்துள்ள பூசாரிகாடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (47). கூழித்தொழில் செய்து வந்தார். இவருக்கு ஆகாஷ் (23) என்ற மகன் உள்ளார். ஆகாஷ் கறிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பழனிசாமியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணத்தினால் மனைவி ஜெயந்தி பிரிந்து சேலத்தில் தனியாக வசித்து வருகிறார். இதையடுத்து பழனிசாமி இரண்டாவதாக ஜெயலட்சுமி (38) என்பவரை திருமணம் செய்துள்ளார். அவர் தனது முதல் கணவரின் 18 வயது மகளுடன், பழனிசாமி மற்றும் அவரது மகன் ஆகாஷ், நான்கு பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஐந்து நாட்களாக பழனிசாமி, ஜெயலட்சுமி வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அவர்கள் பழனிசாமியின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். பழனிசாமியின் உறவினர்கள் மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் போலீசார், பழனிசாமியின் மகன் ஆகாஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தந்தை பழனிசாமி மற்றும் சித்தி ஜெயலட்சுமி ஆகிய இருவரையும் கடந்த 15 ஆம் தேதி இரவு தலையை துண்டித்து படுகொலை செய்து உடல் பாகங்களை மூன்று சாக்கு மூட்டைகளில் கட்டி இரண்டு ஏரிகளில் வீசிவிட்டதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து, ஏரிகளில் கிடந்த உடல் பாகங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆகாஷை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் ஜெயலட்சுமியை, தந்தை பழனிசாமி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவரது மகளையும் அழைத்து வந்துள்ளார். தற்போது 18 வயதாகும் அந்த இளம் பெண்ணிடம் அவ்வப்போது தந்தை பழனிசாமி தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். மகள் போன்றவள் என்று எண்ணாமல் அவர் தவறாக நடக்கும் நிலையில் அதற்கு மனைவி ஜெயலட்சுமியும் உடந்தையாக இருந்துள்ளார். இதனைப் பார்த்த ஆகாஷ் கோபம் கொண்டு தனது தந்தை பழனிசாமி, சித்தி ஜெயலட்சுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதற்கு அவர்கள் ஆகாசை மிரட்டியுள்ளனர். இதனால் கோபமடைந்த ஆகாஷ் கறி வெட்ட பயன்படுத்தும் கத்தியால் தந்தை மற்றும் சித்தியை அறுத்து கொலை செய்து மூட்டையில் கட்டி ஏரியில் வீசியது தெரிய வந்தது. இக்கொலை சம்பவம் நடைபெறும் போது ஜெயலட்சுமியின் 18 வயது மகளும் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பென்னையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த இரட்டை கொலை சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.