அமெரிக்கா: 33 ஆண்டுகளில் 24 மில்லியன் மைல்; விமான பயணத்தில் சாதனை; யார் இந்த பயண...
மத்தியப் பிரதேசம்: காதலை ஏற்க மறுப்பு; ஆசிரியையை மீது பெட்ரோல் ஊற்றித் தீவைத்த மாணவர்; என்ன நடந்தது?
மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள கொட்வாலி என்ற கிராமத்தைச் சேர்ந்த 18 வயது மாணவன், அங்குள்ள பள்ளியில் 12வது வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றிய ஒருவரை அவன் ஒரு தலைப்பட்சமாகக் காதலித்து வந்தார்.
ஆசிரியைக்கு 26 வயதாகிறது. மாணவனின் காதலை அந்த ஆசிரியை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் அவன் தொடர்ந்து ஆசிரியையைப் பின் தொடர்ந்து வந்தார். ஆசிரியையின் புகாரைத் தொடர்ந்து அவன் அப்பள்ளியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அம்மாணவன் வேறு ஒரு பள்ளியில் சேர்ந்து படித்து வந்தான்.

இந்நிலையில் சுதந்திரத்தினத்தன்று சம்பந்தப்பட்ட ஆசிரியை சேலை அணிந்து வந்தார். அது குறித்து அவன் ஏதோ ஆட்சேபகரமாக விமர்சனம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஆசிரியை இது குறித்து புகார் செய்திருந்தார். அதனால் அம்மாணவன் ஆசிரியை மீது கடும் கோபமடைந்தார்.
ஆசிரியையைப் பழி வாங்க வேண்டும் என்று நினைத்த அவன் நேராக ஆசிரியை வீட்டிற்குச் சென்றார். செல்லும்போது தன்னுடன் பாட்டிலில் பெட்ரோல் எடுத்துச் சென்றார். ஆசிரியை வீட்டிற்குச் சென்றதும் அவர் மீது பெட்ரோல் ஊற்றித் தீவைத்துவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பக்கத்திலிருந்தவர்கள் தீயை அணைத்து ஆசிரியையை மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் 15 சதவீதம் அளவுக்குத் தீக்காயம் அடைந்துள்ளார். மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். அவரது உயிருக்கு ஆபத்தில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தப்பியோடிய மாணவனை போலீஸார் விரைந்து செயல்பட்டு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவனுக்கு ஆசிரியையைக் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தெரியும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.