‘வாட்ஸ்அப்’ மூலம் 50 சேவைகள்; மெட்டா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த தமிழக அரசு!
சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!
நீதித்துறையை விமர்சித்த புகாரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியொன்றில், நீதித்துறையை அவமதிக்கும் வகையில் நீதிமன்ற செயல்பாடுகளை மோசமாக விமர்சித்து ஆபாச வார்த்தைகளால் பேசியதாகக் கூறி, வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
அந்த புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் புகார் தொடர்பாக சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் அலெக்சாண்டர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நடைபெற்றது.
விசாரணை முடிவில், மனுதாரரின் புகார் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.