Online Gaming Bill: எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் ஆன்லைன் கேமிங் மசோதா! -...
கச்சா எண்ணெய் மீது தள்ளுபடி! அமெரிக்கா வேண்டாம்; ரஷியா இருக்கு! இந்தியாவுக்கு இன்ப அதிர்ச்சி!
இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் மீது ரஷியா தள்ளுபடி அறிவித்துள்ளது.
ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரி விதிக்கப்படும் என்று எச்சரித்த அமெரிக்கா, இந்தியா மீது 50 சதவிகித கூடுதல் வரியை விதித்தது. இந்தியா மீதான அமெரிக்காவின் இந்த வரிவிதிப்பு, உலக பொருளாதார நாடுகளிடையே பெரும் பேசுபொருளாகியது.
இந்த நிலையில், இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் மீது 5 சதவிகிதம் தள்ளுபடி செய்வதாக ரஷியா அறிவித்துள்ளது.
இதுகுறித்து, ரஷியா கூறுகையில், இந்தியாவுக்கு இது ஒரு சவாலான நிலை என்றபோதிலும், நமது உறவில் நம்பிக்கை உள்ளது. வெளிப்புற அழுத்தங்கள் இருந்தபோதிலும், இந்தியா - ரஷியா எரிசக்தி ஒத்துழைப்பு தொடரும் என்று நம்புகிறோம்.
அரசியல் நிலைமை இருந்தபோதிலும், இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி கிட்டத்தட்ட அதேஅளவில்தான் இருக்கிறது. தள்ளுபடியைப் பொறுத்தவரை, இது ஒரு வணிக ரகசியம் என்று தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி, இந்திய பொருள்களை அமெரிக்க சந்தைக்குக் கொண்டுசெல்வதில் சிக்கல் ஏதேனும் இருந்தால், இந்திய பொருள்களுக்காக ரஷியாவின் சந்தை எப்போதும் திறந்திருக்கும் என்றும் தெரிவித்தனர்.