செய்திகள் :

விகடனில் தங்கள் படைப்பு வருவது தவம் நிறைவேறிய சந்தோஷம் போல! - நெகிழும் தேசாந்திரி | #நானும்விகடனும்

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

சிறு வயதிலிருந்தே என் காதுகளில் மெல்லிசையாக ஒலிக்கிற பெயர் “ஆனந்த விகடன்”. எங்கள் வீட்டின் மூலையில் எப்போதும் குவிந்து கிடந்த விகடன் இதழ்களின் வாசனையும், பக்கங்கள் மாறும் சலசலப்பும் என் நினைவில் முத்திரை பதித்தன.வாசிப்பின் பசி, அந்தப் பக்கங்களில் ஊறி கிடந்தது.

காலம் கடந்தது ...எழுத்தாளர்  பிரபஞ்சன் இல்லத்திற்கு சென்ற நாள் வந்தது. அவரது வீட்டின் மேசையிலும், என் சிறுவயது தோழனைப் போல, விகடன் அமைதியாகக் கிடந்தது.என் கைகள் தானாக அந்த இதழைத் தழுவிக் கொண்டன.

ஒவ்வொரு வரியும் பழைய உறவின் வெப்பத்தைத் தந்தது. நான் வாசிக்கும் விதம், என் கண்களில் மிளிர்ந்த பிரியம் அதை பிரபஞ்சன் கவனித்தார். அவர் முகத்தில் ஆச்சரியம். என் சிறுவயது நினைவுகளில் ஒரு நிழல் போல நிற்கும் முகம் என் தாத்தா, ஞானசம்பந்தன். அவரது கையில் எப்போதும் ஒரு ஆனந்த விகடன்.அதன் பக்கங்கள் மாறும் சலசலப்பே வீட்டின் காலை இசை. பள்ளி நாட்களில், அந்தப் பக்கங்களின் வாசனை எனக்குப் பழக்கமானது. காலம் நகர்ந்தது…

இன்று வரை, அப்பாவுடன் கடைக்குப் போகும் போது, அவர் முதலில் கைக்கு எடுப்பது ஆனந்த விகடன் தான். கடைக்குச் செல்லும் அந்தச் சின்ன நடைப்பயணம், எனக்கு ஓர் இனிய மரபின் தொடர்ச்சி போல. அப்பாவின் விரல்களில் பதியும் அச்சுப் புத்தகத்தின் கனமும், அதன் கவரின் பழக்கமான புன்னகையும் எனது சிறுவயதை மீண்டும் வரவழைக்கும்.

விகடன் எங்கள் வீட்டில் வெறும் இதழல்ல, அது மூன்று தலைமுறைகளின் நினைவுப் பாலம்.தாத்தாவின் வாசிப்பு சுவையும், அப்பாவின் பழக்கமும், என் உள்ளத்தில் எழுத்தின் விதையை விதைத்தன. அந்த விதை இன்று வரை விகடன் பக்கங்களில் மலர்ந்து கொண்டிருக்கிறது.

ஒரு நாள், எங்கள் வீட்டின் வாசலில் ஒரு அண்ணன் வந்து நிற்க, “உள்ளே வரலாமா?” என்று கேட்டார்.வாசல் திறந்தவுடன், அந்த முகத்தைப் பார்த்ததும் “நம்ம எங்கேயோ பார்த்திருப்போமே”… என்று உள்ளம் யோசித்துக் கொண்டே இருந்தது.

சில நிமிடங்கள் கழித்து அவர் சொன்னார், நாங்கள் விகடனிலிருந்து வருகிறோம். அந்தச் சொல்லைக் கேட்டவுடன், என் மனதில் ஓர் இனிய மகிழ்ச்சி. அவரை உள்ளே அன்போடு அழைத்துக் கொண்டேன். பேச்சு நடுவே, அவர் சிரித்துக்கொண்டு, “நானும் உங்களை எங்கேயோ பார்த்திருப்பேன் போல இருக்கே… உங்கள் பெயர் என்னம்மா?” என்று கேட்டார்.“காயத்ரி சுவாமிநாதன்,” என்றேன்.

அவரின் முகத்தில் ஒரு சற்றே ஆச்சரியம்; நானும் கேட்டேன் – “உங்க பேர் என்ன?”அவர் பெயரைச் சொன்னார் – “ஜினாத்தனன்”  என்றார். பல வருடங்களுக்கு முன்பு, இந்த ஜினாத்தனன் என் வாழ்க்கையில் ஒரு கருத்தைப் போல வந்து சென்றவர் . அவரது வாழ்க்கையிலும் நானும் ஒரு கருத்தைப் போலவே சென்றிருந்தேன். ஆனால், எங்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் ஏற்கனவே தெரிந்திருந்தோம்.

பல ஆண்டுகள் கழித்து, இயற்கை – விகடன் வழியாக  அந்த அண்ணாவையே எங்கள் வீட்டிற்கே வர வைத்தது. அந்தச் சந்திப்பு ஒரு சிறிய அதிசயமாக இருந்தது. “காயத்ரி நீயா? உங்கள் வீடா இது?” என்று அவர் முகத்தில் ஒரு இனிய அதிர்ச்சி.அந்த ஒரு நிமிடம் என் வாழ்க்கையில் மிகவும் ஜாலியாகப் பதிந்தது.

விகடன், எனக்கு இந்த  ஜினா அண்ணாவை அறிமுகப்படுத்தியது மட்டும் அல்ல, ஜினா அண்ணாவுடன் சுரேஷ், சந்தீப்,, ஆனந்த்ராஜ் அண்ணா – மூவரும் வந்திருந்தார்கள்.ஒவ்வொருவரும் தங்கள் வேலையில் மூழ்கியிருந்தனர். அவர்கள் பின்னணி பாடகர் ஸ்ரீராம் பார்த்தசாரதி அண்ணாவை நேர்காணல் செய்ய,எங்கள் வீட்டிலேயே ஸ்ரீராம் அண்ணாவை பதிவு செய்தனர்.ஸ்ரீராம் அண்ணாவும், ஸ்ருதி அக்காவும் எங்கள் குடும்பத்தினரே.“காயத்ரி வீட்டில் எடுத்தால் நன்றாக இருக்கும்,” என்று அவர்கள் சொன்னபோது,அந்தச் சிறிய தருணம் கூட என் மனதில் ஒரு பெருமையாக நிறைந்தது.

விகடன் எனக்கு வெறும் இதழல்ல. அது மனிதர்களை இணைக்கும் ஒரு பாசப்பாலம்.சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியிலும் ஒரு இனிய காட்சியைத் தந்தது.சற்றும் எதிர்ப்பாராத தருணத்தில் ஜினா அண்ணா அங்கே அமர்ந்திருந்தார்.அங்கே இருப்பவர்களிடம் நோக்கி, “என் தங்கச்சி” என்று உரிமையுடன் கூறினார்.திருவண்ணாமலைக்கு அவர் எங்கள் வீட்டுக்கு வந்தபோது, கோயில்கள் எல்லாம் கூட்டிச் சென்ற நாட்களை நினைவுக்கூர்ந்து “என் தங்கை காயத்ரி ரொம்ப அன்பான பொண்ணு,” என்று பெருமையுடன் மீண்டும் மீண்டும் சொன்னார்.அந்த உரிமையும் பாசமும் எனக்கு விகடன் கொடுத்த இன்னொரு பரிசு.

என் அப்பா, ஆனந்த விகடனில் தங்களுடைய படைப்புகளை எழுதியவர். அப்போதெல்லாம், ஒரு படைப்பு விகடனில் வரப்போகிறது என்று சொல்லும்போது, அவர் முகத்தில் ஒரு பூரிப்பு. அது ஒரு தவம், நிறைவேறிய சந்தோஷம் போல. அந்த மகிழ்ச்சியை எனக்குத் தந்தபோதும், அப்போது எனக்கு விகடன் மீது பெரிதாக ஒரு ஈர்ப்பு இல்லை.

வாசித்தேன், பார்த்தேன், ஆனாலும் இதோ! இதுதான்! என்று உள்ளம் துள்ளும் அந்த பிணைப்பு இல்லை.ஆனால், வாழ்க்கை என் பாதையை தேசாந்திரப் பயணங்களால் நிரப்பியது பன்னிரண்டு ஆண்டுகளாக நான் நாடு தழுவி சுற்றி, அந்த அனுபவங்களைப் பல்வேறு முக்கியமான பத்திரிகைகளில் எழுதிக்கொண்டே இருந்தேன்.

ஒருநாள், எனது  தேசாந்திரி பயணத்தை கட்டுரைகளாக எழுதி, விகடனுக்கு அனுப்பினேன். நான் எழுதும்போது அங்கீகாரம் தேடுபவள் அல்ல. என் எழுத்து, எழுதிய அந்த நிமிஷத்திலேயே வென்றுவிட்டது என நம்புவேன்.ஏனெனில் அது என் சொற்களிலும் அனுபவங்களிலும் எனக்கு இருக்கும் நம்பிக்கையின் விளைவு.ஆனால், அதைத் தாண்டி அங்கீகாரம் கிடைத்தால், இயற்கைக்கு நன்றி சொல்வேன்; என் எழுத்துக்கும் நன்றி சொல்வேன்.அப்படித்தான், ஒரு நாள் நான் விகடனுக்கு அனுப்பிய பல கட்டுரைகளில், சபர்மதி பற்றிய ஒரு கட்டுரை தேர்ந்தெடுக்கப்பட்டுப் பரிசும் பெற்றது.எனது  வீட்டிலே பெருமிதம் நிறைந்தது.

இயக்குநர் ராம்

விகடன் ஒரு விஷயத்தை மக்களிடம் விரைவாகக் கொண்டு சேர்க்கும் திறன் கொண்டது என நான் எப்போதுமே நம்பியிருக்கிறேன்.ஆனால், என் எழுத்தின் உள்ளடக்கம், குரல் அனைத்தும் வேறுபட்டவை.ஒரு பெண்ணாக, பல ஆண்டுகளாக செய்த தேசாந்திரிப் பயணங்களின் உண்மையான அனுபவங்கள் தான் என் கட்டுரைகள்.அதை வாசிக்கும் வாசகர்கள், “உங்க கட்டுரை படிச்சேன்” என்று ஆச்சரியத்துடன், பாராட்டுகளுடன் என்னைத் தேடிவந்தார்கள்.என் எழுத்தில் எனக்கு இருக்கும் நம்பிக்கையை விட, அவர்களுக்கு அதிக நம்பிக்கை இருந்தது. “அடுத்தது என்ன கட்டுரை?” என்று தொடர்ந்து கேட்டார்கள்.

அந்த எதிர்பார்ப்பு, எனக்கு மிகப் பெரிய உற்சாகமாக இருந்தது. விகடன் எனக்கு வெறும் பத்திரிகை அல்ல.அது என் எழுத்தின் ஒரு திருப்புமுனையும், என் வாழ்க்கையின் இனிய நினைவுப் புத்தகமும். பிறகு, எனக்கு ஒரு அந்நிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.“நாங்கள் விகடனிலிருந்து பேசுகிறோம். ‘பறந்து போ” படத்தின் பிரமோஷனுக்காக ஆந்திரப் பிரதேசத்திற்கு நீங்கள் வர வேண்டும். அங்கே, ராம் சாருடன் ஒரு நாள் பயணம் செய்ய வேண்டும்.

அந்த உரையாடலை நீங்கள் மட்டுமே செய்ய முடியும். நீங்கள்தான் அதற்கான சரியான நபர்,” என்றார்கள். எனக்குள் ஒரு சற்று வியப்பும், ஒரு சிறு ஆர்வமும் எழுந்தது. உடனே, நான் கிளம்ப தயாரானேன். ராம் சாருடன் பயணம் செய்யப் போகிறேன் என்பதால் எனக்கு ஒருவித உற்சாகம்.ஏனெனில், என் வாழ்க்கையில் ராம் சாருடன் ஏற்பட்ட ஒரு பழைய நினைவு இன்னும் பசுமையாக இருக்கிறது.

நான் சிறுமியாக இருந்தபோது, ஒருமுறை ராம் சாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.அப்போது அவர் என்னிடம், “நீங்க என்ன பண்றீங்க?” என்று கேட்டார். நான் யோசித்து பதில் சொல்லவிருக்கும் முன்னே, என் அப்பா, “என் பெரிய பொண்ணு கவிதை எழுதுவா,” என்று சொல்லிவிட்டார். ஆனால் அந்தச் சில வினாடிகளில் ராம் சார் சொன்னார். உங்க அக்கா கவிதை எழுதுறாங்கன்னா, “காயத்ரி கவிதையாகவே வாழ்ந்து கொண்டிருக்காங்க.”அந்த ஒரு வரி, என் மனத்தில் என்றும் எரிய வைக்கும் விளக்காக இருக்கிறது.என் தேசாந்திரிப் பயணங்களிலும், பல தடவைகள் மனதில் உற்சாகம் குறைந்தபோது, அந்தச் சொற்கள் எனக்கு பலமாக இருந்தது. அதைத் தாண்டியும், ராம் சாரின் சமூக பார்வை, அவர் படங்களின் வழியாக சொல்லும் கருத்துகள், அவர் படங்களில் வரும் பாத்திரங்களும் வசனங்களும் என் வாழ்க்கையிலும் நடந்தவை. அதனால், அவர் மீது எனக்கு ஒரு தனிப்பட்ட மரியாதையும் கலைப்பற்றும் உள்ளது.

இதனால் தான், “இன்று ராம் சாருடன் பயணம் செய்யப் போகிறேன்” என்ற நினைவே எனக்கு ஆரோக்கியமாக இருந்தது.அந்த நாள், என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்.அந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய விகடனுக்கு என்றென்றும் நான் நன்றி சொல்லுகிறேன்.அங்கு, அந்தப் பயணத்தின் போது, எனக்கு சில புதிய விகடன் நண்பர்களும் கிடைத்தனர்.இன்று,விகடன் எனக்கு ஒரு குடும்பம் போல.வாழ்க்கையில் பலர் என்னைத் துன்பப்படுத்தும் வார்த்தைகள் கூறியிருக்கிறார்கள்.“உன் பெயர் எதிலும் வந்திருக்கா?”, “நீ என்ன சாதிச்ச?”, “ஒரு பெண்ணாக நீ என்ன செய்ய முடியும்?”பல பரிமாணங்களில் என்னைச் சோதித்தார்கள்.ஆனால், அந்த எல்லா காயங்களுக்கும் பதிலாக, விகடன் எனக்கு ஒரு நல்ல படைப்பாளி என்ற அங்கீகாரத்தை வழங்கியது.

இன்று வரை, அந்த அங்கீகாரம் என்னை உற்சாகப்படுத்தி எழுத வைத்துக் கொண்டிருக்கிறது. எனக்கு விகடன் மீது ஒருபோதும் ஆச்சரியம் அல்லது வியப்பு இல்லை. ஆனால் மனம் எப்போதும் ஆரோக்கியமாகவே இருக்கும்.ஏனெனில், நல்ல படைப்புக்கு மட்டுமே அங்கீகாரம் அளிக்கும் பத்திரிகை என்ற நம்பிக்கை எனக்குள் உறுதியாக இருக்கிறது. விகடன் என்ககு பத்திரிகை அல்ல,அது என் வீடு.அதில் இருப்பவர்கள், என் குடும்ப உறுப்பினர்கள்.அந்தப் பிணைப்பை எனக்குக் கொடுத்த இந்த இயற்கைக்கு, என் நன்றிகள்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

வந்தாரை வாழ வைக்கும் சென்னை என்னை மட்டும் கை விட்டுவிடுமா என்ன? | #Chennaidays

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

கபிலராக மாறி வேள்பாரியை நான் உணர்ந்த தருணம்! - கற்பனையின் வலிமை | #என்னுள்வேள்பாரி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

கோவையின் அமைதியான வாழ்க்கை டு சென்னையின் பரபரப்பான வாழ்க்கை - மறக்க முடியாத பயணம் | #ChennaiDays

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பெரும்பாடத்தை பாரி ஒரு வரியில் சொல்கிறான்! - #என்னுள்வேள்பாரி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

ஒருவார விகடன் படிக்காது போனாலும் மனம் துடிக்கும்! - நெஞ்சோடு நிற்கும் நினைவலை | #நானும்விகடனும்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சிறுகுடி மன்னனின் எழுச்சி பெரும் மாற்றத்தை கொடுக்கும்! - அறம் வென்ற காவியம் | #என்னுள்வேள்பாரி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க