போலந்தில் யூஎஃப்ஓ விபத்து? வானில் பறந்து வந்து கீழே விழுந்து வெடித்த மர்ம பொருள்...
ஃபிளிப்கார்ட்டில் ஐபோன் 16 விலை சரிவு! சலுகையுடன் வாங்குவது எப்படி?
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 ஸ்மார்ட்போனுக்கு ஃபிளிப்கார்ட்டில் அதிரடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ரூ. 79,900 மதிப்புடைய ஐபோன் 16-ஐ ரூ. 67,500க்கு வாங்கலாம்.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு உள்ளது.
அடுத்த மாதம், ஐபோன் 17 வரிசையில் நான்கு புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகவுள்ளன.
ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 ப்ரோ, மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய நான்கு ஸ்மார்ட்போன்களை ஆப்பிள் அறிமுகம் செய்யவுள்ளது.
இதனிடையே, தயாரிக்கப்பட்ட ஐபோன் 16 விற்பனையை தீவிரமாக்குவதற்காக ஃபிளிப்கார்ட் சில சலுகைகளை அறிவித்துள்ளது.
ஐபோன் 16 உண்மை விலையான ரூ. 79,900லிருந்து ரூ. 10,000 குறைத்துள்ளது ஃபிளிப்கார்ட். இதன்படி, தற்போது ஃபிளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 16 விலை ரூ. 69,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதனை ஆக்சிஸ் வங்கி கடன் அட்டை மூலம் வாங்குபவர்களுக்கு கூடுதலாக ரூ. 3,507 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த சலுகையையும் சேர்த்துக்கொண்டால், பயனர்கள் ரூ. 67,500 கொடுத்து ஐபோன் 16 ஐ பெற்றுக்கொள்ளலாம்.
ஃபிளிப்கார்ட் தளத்தில் இதற்கு முன்பு விற்பனையான விலைகளை விட இது மிகவும் குறைவு என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிக்க | அமேசானில் ரூ. 32,780-க்கு ஐபோன் 15 வாங்கலாம்! ரூ. 47,120 தள்ளுபடி பெறுவது எப்படி?