செய்திகள் :

3-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை!

post image

தொடர்ந்து 3- வது நாளாக பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று(ஆக. 20) காலை
81,671.47 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.38 மணியளவில் சென்செக்ஸ் 150.06 புள்ளிகள் அதிகரித்து 81,794.45 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 39.80 புள்ளிகள் உயர்ந்து 25,020.45 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. கடந்த வாரம் நிஃப்டி 25,000 புள்ளிகளுக்குக் கீழ் சென்ற நிலையில் இன்று 25,000-யைக் கடந்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் துறைகளைப் பொருத்தவரை ஐடி, டெலிகாம் தலா 1% உயர்ந்தன. அதேநேரத்தில் மீடியா, வங்கி, பார்மா, தனியார் வங்கிகள் தலா 0.3% சரிந்தன. பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் ஓரளவு லாபத்துடன் வர்த்தகம் செய்யப்படுகின்றன.

ஹிந்துஸ்தான் யூனிலீவர், டிசிஎஸ், எடர்னல், இன்போசிஸ், என்டிபிசி ஆகிய நிறுவனங்கள் நல்ல லாபத்தைப் பெற்றுள்ளன.

அதேநேரத்தில் ஸ்ரீராம் பைனான்ஸ், பஜாஜ் பைனான்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ், டாடா மோட்டார்ஸ், ஹிண்டால்கோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வருகின்றன.

Stock Market Updates: Sensex gains over 100 pts, Nifty above 25,000

இதையும் படிக்க |தே.ஜ. கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்!

காலாவதியான பாலிசிகளைப் புதுப்பிக்க எல்ஐசி புதிய திட்டம்

காலாவதியான தனிநபா் பாலிசிகளைப் புதுப்பிக்க ஒரு மாத கால சிறப்பு திட்டத்தை இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி அறிமுகப்படுத்தியுள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பி... மேலும் பார்க்க

கர்நாடகாவில் தங்கம் மற்றும் செம்பு ஆய்வு உரிமத்தை வென்ற சிங்கரேணி!

ஹைதராபாத்: மத்திய சுரங்க அமைச்சகத்தால் நடத்தப்பட்டும் ஏலத்தின் மூலம் கர்நாடகாவில் தங்கம் மற்றும் செம்புக்கான ஆய்வு உரிமத்தைப் வென்றுள்ளதாக அரசுக்குச் சொந்தமான நிலக்கரிச் சுரங்க நிறுவனமான சிங்கரேணி நில... மேலும் பார்க்க

முதல் நாளில் சந்தாவை முழுவதுமாக பெற்ற ஜெம் அரோமாடிக்ஸ்!

புதுதில்லி: சிறப்புப் பொருட்களை உற்பத்தி செய்யும் ஜெம் அரோமாடிக்ஸ் லிமிடெட், தனது பங்கு விற்பனையின் முதல் நாளில் சந்தாவை முழுவதுமாக பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.பங்குச் சந்தையிலிருந்து நிதி திரட்ட 97,... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ.86.99 ஆக நிறைவு!

மும்பை: ஜிஎஸ்டி மறுசீரமைப்பு குறித்த நம்பிக்கை மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட நேர்மறையான மாற்றங்களுக்குப் பிறகு இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 40 கா... மேலும் பார்க்க

காளையின் ஆதிக்கம்: தொடர்ந்து ஏற்றத்தில் சென்செக்ஸ், நிஃப்டி!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் காளைகள் தங்கள் பிடியை இறுக்கியதால், இந்திய பங்கு குறியீடுகள் தொடர்ந்து நான்காவது நாளாக லாபத்தில் முடிவடைந்தன. முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை கொள்முதல் செய்ததும், அத... மேலும் பார்க்க

கீழே விழுந்தால் சேதமாகாது, அதிக பேட்டரி: அறிமுகமாகிறது ரெட்மி நோட் 15 பிளஸ்!

Redmi Note 15 Pro+ Display, Battery Specifications Confirmed Days Ahead of Launch in Chinaரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் சீனாவில் இந்த வாரம் அறிமுகமாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் வெளி... மேலும் பார்க்க