செய்திகள் :

தே.ஜ. கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்!

post image

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

நாட்டின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவரான ஜகதீப் தன்கர் ஜூலை 21-இல் தனது பதவியை ராஜிநாமா செய்தார். 2027, ஆக. 10-ஆம் தேதி ஜகதீப் தன்கரின் பதவிக் காலம் நிறைவடைய இருந்த நிலையில், உடல்நலத்தைக் காரணம் காட்டி தனது பதவியை அவர் ராஜிநாமா செய்தார்.

உயிரிழப்பு, ராஜிநாமா அல்லது பதவி நீக்கம் உள்ளிட்ட காரணங்களால் முழு பதவிக் காலமான 5 ஆண்டுகளுக்குள் குடியரசு துணைத் தலைவா் பதவி இடம் காலியாக நேரிட்டால், கூடிய விரைவில் அந்தக் காலி இடத்தை நிரப்புவதற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும்’ என்று அரசமைப்புச் சட்டப் பிரிவு 68 (2)-இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விதியின்கீழ், அடுத்த குடியரசு துணைத் தலைவர் தோ்தலுக்கான அறிவிக்கையை ஆகஸ்ட் 7-ஆம் தேதி தோ்தல் ஆணையம் வெளியிட்டது.

அதன்படி, வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளான நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று(ஆக.20) காலை வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெபி.நட்டா, நிதின் கட்கரி, சிராக் பஸ்வான் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

NDA candidate for Vice President post, C.P. Radhakrishnan files his nomination in the presence of PM Narendra Modi.

இதையும் படிக்க : அப்பா, உங்கள் கனவை நிறைவேற்றுவதே என் குறிக்கோள்! ராகுல் உருக்கம்

நாடாளுமன்றத்தில் ராஜீவ் காந்தி படத்துக்கு சோனியா, ராகுல் மலர்தூவி மரியாதை!

நாடாளுமன்றத்தில் வளாகத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் புகைப்படத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.நாடு முழுவதும் மறைந்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜீ... மேலும் பார்க்க

அப்பா, உங்கள் கனவை நிறைவேற்றுவதே என் குறிக்கோள்! ராகுல் உருக்கம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட்டி, அவரது மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உருக்கமான கருத்தை பகிர்ந்துள்ளார்.நாடு முழுவதும் மறைந்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பி... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 3 - 12 வகுப்புகளுக்கு சிறப்பு பாடத் தொகுப்பு!

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை மாணவர்களுக்கு கற்பிக்கும் வகையில் இரண்டு சிறப்பு பாடத் தொகுப்புகளை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஆர்டிசி) வெளியிட்டுள்ளது.’ஆபரேஷன் சிந்தூர் -... மேலும் பார்க்க

தில்லி முதல்வர் மீது தாக்குதல்: குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு!

தில்லி முதல்வர் ரேகா குப்தாவை இன்று திடீரென ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தில்லியின் சிவில் லைன்ஸில் உள்ள ரேகா குப்தாவின் வீட்டில், மக்களின் குறைகளை கேட்கும் ‘ஜன் சுன்வை’ ந... மேலும் பார்க்க

ஹிமாசலில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள்! பீதியில் மக்கள்!

ஹிமாசல் பிரதேசத்தில் புதன்கிழமை அதிகாலை அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.முதலில், சம்பா மாவட்டத்தில் அதிகாலை 3.27 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டு... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி பிறந்த நாள்: நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் புதன்கிழமை காலை அஞ்சலி செலுத்தினர்.நாடு முழுவதும் மறைந்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் இன்று கொண... மேலும் பார்க்க