செய்திகள் :

யூடியூபரின் இறப்புக்கு நீதிகேட்டு போராடும் மேற்கு ஆப்பிரிக்க நாடு - யார் இவர், என்ன காரணம்?

post image

மேற்கு ஆப்பிரிக்கா நாடான புர்கினா ஃபாசோவை சேர்ந்த, அலினோ ஃபாசோ. ஜனவரி 2025-ல் மற்றொரு மேற்கு ஆப்பிரிக்கா நாடான ஐவரி நாட்டில் உளவு பார்த்த குற்றச்சாட்டிற்காகக் கைது செய்யப்பட்டு அபிஜான் நகரில் உள்ள ராணுவ அகாடமி சிறையில் அடைக்கப்பட்டார்.

அலினோ ஃபாசோ
அலினோ ஃபாசோ

இவர் ஜூலை 26, 2025 அன்று சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக ஐவரி கோஸ்டின் அதிகாரிகள் தெரிவித்தனர். எந்தவொரு காரணமும் இன்றி அலினோ ஃபாசோ தற்கொலை செய்து கொண்டதாக அறிவித்த ஐவரி கோஸ்டின் கூற்றை முழுமையாக புர்கினா ஃபாசோ அரசாங்கமும், மக்களும் நிராகரிக்கின்றனர்.

மேலும், அவரின் மரணத்திற்கு நீதி கேட்டு மக்கள் போராடி வருகின்றனர்.

யார் இந்த அலினோ ஃபாசோ?

புர்கினா ஃபாசோவை பூர்வீகமாக கொண்ட அலினோ ஃபாசோ ஒரு சமூக ஊடக பிரபலம். அவரது இயற்பெயர் அலைன் ட்ரோரே. இவர் சமூக ஊடகங்களில் கிட்டத்தட்ட 4,00,000 க்கும் மேற்பட்ட ஃபாலோயர்களை வைத்திருக்கிறார். தன்னை பின்தொடர்பவர்களை தவறாக வழிநடத்தாமல் அரசியல் ஊழல், அதிகாரத் தவறுகள் போன்றவற்றை வெளிப்படையாக, எளிமையான மொழிநடையில் மிகவும் ஈர்ப்பது போல எடுத்துக் கூறுவார்.

அலினோ ஃபாசோ
அலினோ ஃபாசோ

அதனால், ட்ரோரேவை இளைஞர்கள் அதிகளவில் பின்தொடர்ந்தனர். சில நேரங்களில் புர்கினா ஃபாசோ அரசை மட்டுமல்ல, அண்டை நாடுகளின் (குறிப்பாக ஐவரி) அரசியல் சூழ்நிலைகளையும் விமர்சித்திருக்கிறார்.

பலர் இவரை, 'இளம் தலைமுறையின் தாமஸ் சங்காரா (புர்கினா ஃபாசோவின் புரட்சியாளர்) குரல்' என்று அழைத்தனர். 2021-ம் ஆண்டு ட்ரோரே தனது குடும்பத்துடன் புர்கினா ஃபாசோவிலிருந்து ஐவரி கோஸ்டுக்கு குடிபெயர்ந்தார். அங்கு இருந்தபோது, அவர் ஒரு உணவகத்தை வைத்திருந்தார். டிஜிட்டல் செயல்பாட்டிற்கு அப்பால், இடம்பெயர்ந்த பொதுமக்களுக்கு உதவி செய்ய ட்ரோரே ஏற்பாடு செய்து வந்துள்ளார். இந்நிலையில் தான், அவரை உளவு பார்த்ததாக குற்றம்சாட்டி சிறையில் அடைத்தது ஐவரி கோஸ்ட் அரசாங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

`ஒரு கோழியின் கதை' ஆயுளைக் கடந்து; 14 ஆண்டுகள் கடந்து வாழும் ’உலகின் வயதான கோழி’ - ஆச்சர்ய பின்னணி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வாழும் ‘Pearl’ என்ற கோழி, சாதாரணமாக 3 முதல் 10 ஆண்டுகள் வரை மட்டுமே வாழும் கோழிகளின் சராசரி ஆயுளை மீறி, 14 ஆண்டுகள் வாழ்ந்து கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது.Pearl... மேலும் பார்க்க

புனே: "உணவை வீணாக்கினால் ரூ.20 அபராதம்" - உணவகத்தின் அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

புனேயில் தென்னிந்திய உணவகம் ஒன்று தங்களது வாடிக்கையாளர்களுக்கு நூதனமான ஒரு அறிவிப்புப் பலகையை வைத்திருக்கிறது. அறிவிப்புப் பலகைஅதில் உணவுகளின் விலைப்பட்டியலைக் குறிப்பிட்டு கடைசியில், சாப்பாட்டை வீணாக... மேலும் பார்க்க

Dog Bite: நாய் போல் கத்துவார்களா; அசைவம் சாப்பிடக்கூடாதா; தொப்புளைச் சுற்றி ஊசிப் போடுவார்களா?

நாய்க்கடி குறித்த செய்திகள் வராத நாளே இல்லை என்கிற நிலையில் இருக்கிறோம். இன்றும் பலர் நாய் கடித்தால், தொப்புளைச் சுற்றி 16 ஊசிகள் போடுவார்கள் என நினைத்துக்கொண்டு நாய் கடித்தாலும் மருத்துவமனை போகாமல் இ... மேலும் பார்க்க

'அதிகமா உதவறவுங்க 'அங்க'தான் இருக்காங்க'- டிரை சைக்கிளில் இந்தியப் பயணம் செய்த யூடியூபர்ஸ் பகிர்வு

மதுரையைச் சேர்ந்த சிராஜ், அருண் என்ற இரண்டு யூடியூபர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாகஇந்தியா முழுவதும் பயணம் செய்திருக்கிறார்கள்.கிட்டதட்ட 30,000 கி.மீ டிரை சைக்கிள் மூலம் பயணித்து, இயற்கைப் பாதுகாப்பு குறி... மேலும் பார்க்க

``ரூ.12 கோடி பறிபோனது; பெற்றோரையும் இழந்து தனிமரமாக தவிக்கிறேன்'' - மும்பை தொழிலதிபர் விரக்தி ஏன்?

ரூ.12 கோடி இழந்த தொழிலதிபர் எத்தனையோ பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்துள்ளனர். அப்படி இழந்தவர்களில் சிலர் தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர். ஏராளமானோர் பண ஆசையில் கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டம் விள... மேலும் பார்க்க

மும்பையில் தொடரும் கனமழை; சுரங்க சாலை வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட கார்: நீந்தி உயிர் தப்பிய இருவர்

மும்பையில் நான்கு நாள்கள் தொடரும் மழை மும்பையில் கடந்த நான்கு நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இம்மழையால் மும்பை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவில் இருந்து இன்று காலை... மேலும் பார்க்க