ஆக. 22ல் பிகாரில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!
ஜெயிலர் வசூலைக் கூலி முறியடிக்குமா? திருப்பூர் சுப்பிரமணியம் பதில்!
கூலி திரைப்படம் குறித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் பேசியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் ஆக. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக பெரிய வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
இதுவரை இப்படம் ரூ. 450 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கலாம் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், “நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. விமர்சகர்கள் என்கிற பெயரில் பலரும் வன்மமான கருத்துகளைப் பேசி வருகின்றனர். ஆனால், அவற்றால் படத்தின் வணிகம் பாதிக்கப்படவில்லை. இதுவரை தமிழகத்தில் வெளியான படங்களில் அதிக லாபகரமான படமென்றால் ஜெயிலர்தான். கூலி திரைப்படம் ஜெயிலருக்குக் குறைவில்லாமல் இருக்கும் என நினைக்கிறேன்.
நடிகர் ரஜினிகாந்த் 50 ஆண்டுகளாக சினிமாவில் வசூல் சக்ரவர்த்தியாக இருப்பது பெரிய ஆச்சரியம்தான். கூலி படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைக்காமல் இருந்திருந்தால் இன்னும் வணிகம் அதிகரித்திருக்கும். ஒடிடியில் வெளியானதும் எப்படியும் குழந்தைகள் பார்க்கத்தான் போகிறார்கள். அதனால், ஓடிடி நிறுவனத்துக்குத்தான் லாபம். ” எனப் பேசியுள்ளார்.
இதையும் படிக்க: கார்த்தியுடன் இணைந்து நடிக்கும் ஜீவா?